Breaking News

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 15 வயது சிறுவன் வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு : இளம் வயதினரிடையே தொற்று வேகமாக பரவி வருவதால் எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார நிபுணர்கள்

15-year-old boy dies of virus in Sydney, Australia. Health experts warn of rapidly spreading infection among teenagers

சிட்னியில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு ஊரகப் பகுதிகளில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் பணியாளர்கள் சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

இதனிடையே மூளை காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15வயது சிறுவன் Osama Suduh-னுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுவன் உயிரிழந்தான் இதனை அதிகாரப்பூர்வமாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார்.

15-year-old boy dies of virus in Sydney, Australia. Health experts warn of rapidly spreading infection among teenagers.இதனிடையே 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் தேவையின்றி யாரிடமும் பேச வேண்டாம் என்று சுகாதாரத் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. டெல்டா பகுதி வைரஸ் பாதிப்பு குழந்தைகளை தாக்குவதற்கான அபாயங்கள் அனைத்தும் இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படாத நிலையில் 10 முதல் 19 வயது வரையிலான சிறுவர்கள் வைரஸ் பாதிப்புக்கு அதிகம் அழகு வருவதாகவும் இதுவரை 2400 பேர் பாதிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: shorturl.at/wBV19