Breaking News

தனது நற்பெயருக்கு தீங்கிழைக்கும் வகையிலான அவதூறு குற்றச்சாட்டுக்களை முற்றிலும் மறுப்பதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் பேச்சு : தேர்தல் நேரத்தில் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் எண்ணம் நிறைவேறாது என்றும் கருத்து

2007 ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் முன் தேர்வு விவகாரத்தில் பிரதமர் மோரிசன் தேர்வு செய்யப்பட்ட விவகாரம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எதிர்கட்சிகள் முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற குற்றச்சாட்டுகள் தன் மீது வைக்கப்பட்டு வருவதாகவும், இவை மிகவும் கசப்பான மற்றும் தனது பெயருக்கு இங்கு இருக்கும் வகையிலான அவதூறுகள் என்று ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Saturday Paper, Sydney Morning Herald ஆகிய இரண்டு பத்திரிகைகளிலும் இந்த விவகாரம் தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் வெளியாகி இருப்பதாகவும், கட்சியின் சார்பில் முன் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் ஸ்காட் மோரிசன் மீதான ஆவணங்களில் கையெழுத்திட்டு இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

Prime Minister Scott Morrison has spoken out against allegations of defamation that could tarnish his reputation..அந்த நேரத்தில்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக மோரிசன் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அந்த இரண்டு ஊடகங்களிலும் இடம் பெற்றிருப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் விரிவான பதில் கூற வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தேர்தலை மையமாகக் கொண்டு இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாக தன்மீதான அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

தாஸ்மானியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தன்மீதான எந்தவித குற்றச்சாட்டுக்களும் உண்மையானது அல்ல என்றும், அது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பரப்பப்படும் பிரச்சாரம் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை தனக்கு சாதகமாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் பிரதமராக தகுதியற்றவர் என்றும் லிபரல் செனட்டர் Concetta Fierravanti-Wells பாராளுமன்றத்தில் கூறினார்.

இதனிடையே பிரதமர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதரவுக் குரல்களும் எழுந்துள்ளன. பெரும்பாலான தலைவர்கள் குறிப்பிட்ட சமூகத்தின் மீதான பிரதமரின் பங்களிப்பு குறித்த கருத்துக்கள் உண்மை அற்றவை என்றும் அவர் அந்த சமூக மக்களின் மீது அக்கறை கொண்டு இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் உத்திகள் இவை என்றும், ஆனால் கட்சி மிகுந்த ஒற்றுமையுடனும் பலத்துடனும் இருப்பதால் தாங்கள் மக்களுக்கு நிறைவேற்றியுள்ள பல்வேறு நலத்திட்டங்களை அடிப்படையாக வைத்து தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3r1P08C