Breaking News

ஆஸ்திரேலியாவின் ராணுவப் பாதுகாப்பு வீரர் மீது ஆபத்து மிகுந்த லேசர் ஒலியை பாய்ச்சிய சீனா ராணுவம் மீது உரிய விசாரணை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் ஸ்காட் மோரீசன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 17-ம் தேதி அன்று சர்வதேச கடல்பரப்பில் இருந்தபோது ஆஸ்திரேலியாவின் பி-8ஏ போசைடன் ராணுவப் கப்பலில் இருந்த சிப்பாய் மீது சீனாவின் போர் கப்பல் ஒன்று லேசர் வெளிச்சத்தை பாய்ச்சியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் மோரீசன் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Prime Minister Scott Morrison has called for a probe into the Chinese military's use of dangerous lasers on an Australian military bodyguard..இந்நிலையில் தூதரக அதிகாரிகளின் வாயிலாக இந்த சம்பவம் குறித்த விபரங்களை ஆஸ்திரேலிய அரசு சேகரித்து வருகிறது. இதுதொடர்பாக பேசிய பிரதமர் ஸ்காட் மோரீசன், சீனாவின் இந்த பொறுப்பற்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச கடல் விதிமீறல்களை சீனா மேற்கொண்டு வருகிறது என்று பேசினார். இதற்கு சீனா முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது. கடல் விதிகளுக்கு உட்பட்டு தான் லேசர் சோதனையில் ஈடுபட்டதாகவும், ஆஸ்திரேலியா அரசு பொய் பரப்புகளை மேற்கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

Link source: https://bit.ly/3H8FWUK