Breaking News

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொற்று பாதிப்பு மற்றும் பரிசோதனையில் நீடிக்கும் குழப்பம் : ஊரடங்கில் தளர்வுகளை நீட்டிப்பதில் மாற்றுக்கருத்தில்லை என ப்ரீமியர் Dominic Perrottet அறிவிப்பு

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அங்கு அமலில் உள்ள கட்டுப்பாடுகளில் மேற்கொள்ளப்படும் தளர்வுகளில் மாற்றம் இருக்காது என்று ப்ரீமியர் அறிவித்துள்ளார்.

கோவிட் சோதனை தொடர்பில் சிட்னியில் உள்ள St Vincent’s மருத்துவமனை இரு பெரிய தவறுகளை கடந்த நாட்களில் இழைத்துள்ளது. திங்களன்று கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கான கோவிட் சோதனை முடிவு வருவதற்கு முன்னரே அவர்களுக்கு தொற்று இல்லை என்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 602 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Prevalence of infection and testing in New South Wales, Australia. Premier Dominic Perrottet announces no alternative to extending curfew.ஒருவர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் 557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் அதில் 60 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், NSW மாநில சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்தலுக்கு உட்படும் சுகாதாரத்துறை ஊழியர்கள் 14 நாட்களுக்குப் பதிலாக ஏழு நாட்களுக்குப் பிறகு வேலைக்குத் திரும்ப முடியும்.

குயின்ஸ்லாந்திற்கு பயணம் செய்பவர்கள் PCR சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதன் காரணமாக, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பிசிஆர் சோதனைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் சுகாதாரத்துறை மீதான பணிச்சுமையும் அதிகரிப்பதாக சுகாதார அமைச்சர் Brad Hazzard தெரிவித்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 2020 ஆண்டில் கோவிட் தொற்று கட்டுப்பாட்டை உரிய முறையில் செயல்படுத்துவோம் என்றும் ப்ரீமியர் Dominic Perrottet நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3z6JUuE