Breaking News

அதிகரிக்கும் உஷ்ணம்- இருளில் மூழ்கிய தலைநகர்..!!

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், தலைநகர் பெர்த்தின் வடக்குப் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rising heat - the capital immersed in darkness.மேற்கு மின்சார உற்பத்தி நிலையத்தின் தலைமை அதிகாரி வெளியிட்ட தகவலில், கிறிஸ்துமஸ் நாளில் சுமார் 35 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார சேவை பாதிக்கப்பட்டது. ஆனால் மின்சாரத் துறை ஊழியர்கள் இரவும் பகலும் உழைத்து மின்சாரமில்லாத இடங்களுகு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. தற்போது மேலும் 2,600 வீடுகள் மின்சார சேவையில்லாமல் உள்ளனர். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் சீர் செய்யப்பட்டு பழைய நிலைமை மீட்டெடுக்கப்படும் என்று கூறினார்.

தலைநகர் பெர்த் பகுதியில் 40.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. சுமார் நான்கு நாட்களாக அங்கு வானிலை 39. டிகிரி முதல் 40 டிகிரி செல்ஷியஸ் வரை நீடிக்கிறது. பெர்த் நகரத்தின் வடக்குப் பகுதி மட்டுமில்லாமல் பால்கட்டா, பேய்ஸ்வாட்டர், எம்பிள்டன், நொல்லமரா, வெஸ்ட்மினிஸ்டர், லோயர் சிட்டரிங் மற்றும் டன்போரோஹ் போன்ற இடங்களிலும் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/32Ik1Fe