Breaking News

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தொற்று தொடர்பில் உள்ளவர்களின் விவரங்களை பகிர்வது தொடர்பான சட்டப் போராட்டம் : தகவல்களை வெளியிட பணியிட பாதுகாப்பு கண்காணிப்பு குழு தீவிர முயற்சி

விக்டோரியா மாகாணத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் தொடர்பில் இருப்பவர்களை கண்காணிப்பதற்கு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வந்தது. குறிப்பாக தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்படும் அவர்களின் விவரங்கள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக பணியிட பாதுகாப்பு குழு விபரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று கூறிவந்தது. இதற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நீதிமன்றத்தை நாடியது பணியிட பாதுகாப்பு கண்காணிப்பு குழு.

சுகாதாரத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பபடுவது அரசின் கடமை என்றும், இதை பொதுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் விக்டோரியா மாகாண தொற்று பரவல் தடுப்பு அதிகாரி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜூன் மாதம் முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் பணியிட பாதுகாப்பு கண்காணிப்பு குழு சார்பில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

தொடர்பில் உள்ளவர்களின் தகவல்களை வெளியிடாமல் தடுப்பதற்கு அரசு மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களிலும் தற்போது வெளியாகி இருப்பதாகவும் அவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் பணியிட பாதுகாப்பு கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் பணியிட பாதுகாப்பு குழு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.

2020ம் ஆண்டு அப்பகுதியில் இரண்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த நபர்கள் மூலமாகவே தொற்று பரவல் அதிகரிப்பதாகவும் அதுவே இரண்டாம் அறைக்கு காரணமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அப்போது அது தொடர்பான ஆவணங்களை மாகாண அரசு வெளியிடவில்லை என்றும் இது மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றும் பணியிட பாதுகாப்பு கண்காணிப்பு குழு குற்றம்சாட்டியுள்ளது.

Legal battle over sharing of infected people information in the Australian state of Victoria. Workplace Safety Monitoring Committee makes serious effort to release information.தொடர்பாக மாகாண சுகாதார துறைக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் அவர்கள் அந்தக் கடிதத்திற்கு எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்பும் அவர்கள் வழக்கு தொடர்பான எந்தவிதமான ஆவணங்களையும் மாகாண சுகாதாரத்துறை அக்டோபர் மாதம் வரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பொதுநலன் சார்ந்த அடிப்படையில் தொடர்பு தகவல்களை பாதுகாப்பது என்பது மக்களை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக கருத முடியாது என்றும், இந்த சூழலில் என்ன காரணத்திற்காக அரசு விளக்குகிறது என்கிற விவரங்களை தெரிவிக்காமல் இருப்பது சரியான நடவடிக்கை இல்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி Andrew Keogh தெரிவித்துள்ளார்.

தோரியம் மாகாண மக்களின் பாதுகாப்புக்காக வே அரசு தங்களுடைய முழு நடவடிக்கையையும் செலுத்தி வருவதாகவும் தொடர்பில் உள்ளவர்களின் விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவது என்பது சரியான நடவடிக்கை அல்ல என்றும் தொடர்ந்து மாகாண அரசு தங்களது தரப்பு கருத்தை முன்வைத்து வருகிறது இந்நிலையில் பணியிட பாதுகாப்பு கண்காணிப்பு குழுவின் சட்ட நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3FBZelB