Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலலில் தோல்வி அடைந்ததற்கு முழு பொறுப்பு ஏற்பதாக முதலமைச்சர் டாமினிக் பெர்ரோடெட் அறிவித்துள்ளார்.

Premier Dominic Perrottet has declared full responsibility for the defeat in the by-elections in the state of New South Wales.

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ளது பெகா. இது மக்களவை தொகுதியாகவுள்ளது. சமீபத்தில் இந்த தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. அதில் லிபரல் கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் லேபர் கட்சி வேட்பாளர் மைக்கேல் ஹாலந்து (64) வெற்றி பெற்றார்.

Premier Dominic Perrottet has declared full responsibility for the defeat in the by-elections in the state of New South Wales..இதுதொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் டாமினிக் பெர்ரோடெட் செய்தியாளர்களைச் சந்தித்தார். பெகா இடைத் தேர்தல் முடிவுகள் கவலையை தருகின்றன. கொரோனா காரணமாக மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கடுமையாக நடவடிக்கைகள் தோல்விக்கு காரணமாக தெரிகிறது. எனினும், இந்த அரசு நேர்மையாகவும் வலிமையுடனும் தொடர்ந்து செயல்படும் என்பதை உறுதியுடன் கூறுகிறேன். பெகா இடைத் தேர்தலில் லிபரல் கட்சி தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று தெரிவித்தார்.

வெற்றி பெற்ற வேட்பாளர் மைக்கேல் ஹாலந்து மகப்பேறு மருத்துவராக உள்ளார். பெகா தொகுதி உட்பட சில பகுதிகளை துவம்சம் செய்த காட்டுத் தீ பாதிப்பு தொடர்பாக அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை தன்னுடைய பிரச்சாரங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார். அது அவருக்கு வெற்றியை தந்துள்ளதாகவும், இதை லிபரல் கட்சி புரிந்து கொள்ள வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3HPhlWc