Breaking News

தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுவதன் காரணமாக அமெரிக்காவுக்கு செல்லும் முக்கிய பாலத்தை கனடா நாட்டைச் சேர்ந்த கனரக வாகன ஓட்டுநர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனடா நாட்டின் ஆண்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் அவசர நிலையை அறிவித்துள்ளனர். கனரக வாகனங்கள் செல்வதற்கும், பாலங்களில் வாகனங்களை இயக்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Heavy motorists from Canada have been occupying the main bridge to the United States as protests continue to be carried out following strict corona restrictions.இதனால் கனடாவில் இருந்து அமெரிக்காவை இணைக்கும் அம்பாஸிடர் பாலத்தில் கனரக வாகன ஓட்டுநர்கள் நீண்ட நாட்களாகவும், நீண்ட மணிநேரமாகவும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்குள் நுழையும் வாகனங்களும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் டுரேடோ, இந்த நிலை விரைவில் தவிர்க்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

தற்போது கனடா நாட்டின் காவல்துறையினர், தங்கள் நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளனர். விரைவில் பாலத்தில் நிற்கும் வாகனங்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://bit.ly/3uNP1Qu