Breaking News

அடிமையாக நடத்தப்பட்ட தமிழ்பெண்: விசாரணை வளையத்தில் ஆஸ்திரேலியா தம்பதியினர் !

ஆஸ்திரேலியாவில் ஒரு தம்பதி, சம்பளமில்லாத வீட்டு வேலைக்காக ஒரு தமிழ்பெண்ணை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அந்த பெண் பெல்பர்னில் உள்ள இந்த தம்பதியின் மூன்று குழந்தைகளையும் கவனித்து கொண்டுள்ளார்.

இந்த தம்பதிகளை KK மற்றும் KK என்ற புனைப்பெயர்களால் அழைக்கும் வழக்கறிஞர், இந்ததம்பதி எட்டு வருடங்களாக மெல்பர்னின் தென்கிழக்கில் உள்ள இவர்களுடைய வீட்டில் ஒரு அடிமையாக மறைத்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

2007ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், அந்த பெண்மணி இந்தியாவிலிருந்து KK மற்றும் KK குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் அவர்களுடைய குடும்ப சொத்து இருக்கும் இடமான Mount Waverley தங்குவதற்காக பயணம் செய்தார். ஆனால் இந்த பெண்மணியின் விசா அடுத்த மாதம் முடிவடைகிறது. அவருக்கு ஆங்கிலம் பேசவும் தெரியாது.அதனால் தம்பதியினர் தன் சொந்த நாட்டிலிருந்து தெரிந்தவர் என்பதனால் சிறைப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Indian women treated as slave and couple under investigationவக்கீல் Richard Maidment நீதிபதியிடம், அந்த பெண் தனது உரிமை மற்றும் சுதந்திரத்தை இழந்து விட்டார். வீட்டை விட்டு வெளியேறி பிறருடன் தொடர்பு கொள்ளும் திறனையும் இழந்து விட்டார். மேலும் அவர் மருத்துவ மற்றும் பல்சேவை பெறுவதற்கும் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இந்த தம்பதி அந்த அடிமை பெண்ணிற்கு அவரது பிறந்த நாளன்று 5 அல்லது 10 டாலர் மட்டுமே தந்துள்ளனர் என்று கூறினார்.

இந்த பெண்மணியை 2015ல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த சமயத்தில் அவர் வெறும் 40 கிலோ மட்டுமே இருந்துள்ளார் . அந்த பெண்மணிக்கு hypothermia, நீரழிவுநோய் இருந்தது. மேலும் sepsis ஆல் அவதியுற்றதால் அவசர தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். KK மற்றும் KK சோதனை குறைந்தது 6 வாரங்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகின்றது.