Breaking News

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் காவல்துறை நடத்திய துரத்தலில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் : சம்பவத்தில் தொடர்புடைய காவல் அதிகாரி விசாரணையில் ஆஜராகி விளக்கம்

Police chase after teenager killed in police chase in Victoria, Australia. Police officer involved in the incident

2017ம் ஆண்டு விக்டோரியா மாகாணத்தின் Ballan நகரத்தில் Western Freeway அவசரகால வழியில் நடத்தப்பட்ட துரத்தலில் 16 வயதான சிறுமி Jacqueline Vodden வேன் ஒன்றில் இருந்து தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார்.

அவரை பின்னால் துரத்திச் சென்ற காவல்துறையின் வாகனத்தில் இருந்த காவல் அதிகாரி இந்த உயிரிழப்புக்கு காரணம் என்ற வகையில் புகார்கள் எழுந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Police chase after teenager killed in police chase in Victoria, Australia. Police officer involved in the incident..2017 செப்டம்பர் மாதத்தில் Nerrina பகுதியில் நின்று கொண்டிருந்த டிரக் ஒன்றை மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரணத்திற்காக வேன் ஒன்றை போலீசார் துரத்திச் சென்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் வேகமாக சென்ற வேன் ஒரு இடத்தில் மோதி நின்ற நிலையில் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட Jacqueline Vodden சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரோந்து வாகனத்தின் பயணிகள் இருக்கையில் அமர்ந்து சென்ற காவல் அதிகாரி Rory Meddick முக்கிய சாட்சியமாக சேர்க்கப்பட்டார்.

அவரிடம் சிறுமியின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அதிவேகமாக சென்ற வேன் வீடுகளை இடித்துச் செல்லும் அளவுக்கு மோசமாக செலுத்தப்பட்டதாகவும், வேனை ஓட்டிச் சென்றதும் இளம் வயது சிறுவன் என்பதை அப்போது தாங்கள் அறிந்திருக்கவில்லை என்றும் காவல் அதிகாரி விசாரணையில் கூறியுள்ளார்.

Police chase after teenager killed in police chase in Victoria, Australia. Police officer involved in the incident.குறிப்பிட்ட 17 வயது சிறுவன் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவன் என்றும், கைது செய்யப்படவேண்டியவர்கள் பட்டியலில் இருந்த நபர் என்றும் காவல்துறையினர் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். Ballan டவுன்ஷிப் பகுதியில் இருந்து Freeway வழியில் வாகனத்தை செலுத்திய போது சிறுவன் இயல்பாக வண்டியை ஓட்டிச் சென்றதாகவும், ஆனால் சில நேரங்களில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனம் சென்றதை அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் கண்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வாகனம் மோதி நின்றவுடன் தங்களது பின்தொடர்தலை தாங்கள் நிறுத்தி விட்டதாகவும், இந்த விவகாரத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் எதிர்பாராத விதமாக நடைபெற்றது என்றும் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பின்தொடர்தல் மற்றும் கைது நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Link Source: https://ab.co/3Bdcqvu