Breaking News

மூத்த ராணுவ வீரர் பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் வழக்கிற்கு எதிராக சாட்சியம் அளித்த ராணுவ வீரர் தன்னுடைய சாட்சியங்களை திரும்பப் பெறவுள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The announcement by veteran Ben Roberts-Smith that he will withdraw his testimony has caused a stir.

ஆஃப்கானிஸ்தானில் பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் போர் வீதிமீறல்களில் ஈடுபட்ட்டார் என ஆஸ்திரேலியாவில் இயங்கும் நைன் என்கிற ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டது. இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டு என்று கூறி மறுப்பு தெரிவித்த பென் ராபர்ட்ஸ்-ஸ்மித், பொய்யான தகவல்களை வெளியிட்டதாக செய்தி நிறுவனத்தின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

The announcement by veteran Ben Roberts-Smith that he will withdraw his testimony has caused a stir..இதுதொடர்பான விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி பென் ராபர்ட்ஸ்-ஸ்மித்துக்கு எதிராக ராணுவ வீரர் ஒருவர் சாட்சியம் அளித்திருந்தார். அதை தொடர்ந்து நைன் செய்தி நிறுவனத்தின் தரப்பிலான வழக்கறிஞர் நிக்கோலஸ் ஓவன்ஸ் நீதிமன்றத்தில் பேசுகையில், ராபர்ஸ் ஸ்மித்தின் வழக்கறிஞர் இவ்வழக்கில் முக்கிய சாட்சியங்களான இரண்டு பேரை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்துள்ளார்.

இதனால் சாட்சியம் அளிக்கவிருந்த இரண்டு பேரில் ராணுவ வீரரான ஒருவர், தன்னுடைய தரப்பு சாட்சியங்களை திரும்ப பெற முயன்று வருகிறார் என்று கூறினார். இதனால் பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் வழக்கு விசாரணை ஆஸ்திரேலியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நைன் ஊடக நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://bit.ly/3GyMRq0