கடந்த புதன்கிழமை கான்பெராவில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநர் மைக் பர்கஸ், வருடாந்திர மதிப்பீட்டை வழங்கினார். அப்போது பேசும்போது அவர், வெளிநாட்டைச் சேர்ந்த உளவு அமைப்பு ஒன்று ஆஸ்திரேலியாவையும் ஆஸ்திரேலியர்களையும் வேவு பார்த்து வந்துள்ளது.
முன்னாள் மற்றும் தற்போது பதவியில் இருக்கும் உயர்மட்ட அரசு ஊழியர்கள், கல்வி வல்லுநர்கள், சிந்தனை மாற்று அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் ஆஸ்திரேலியர்களின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என பலரையும் இந்த உளவு அமைப்பு கண்காணித்து வந்துள்ளது.
இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் பொதுத் தேர்தலிலும் தலையிட அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தெரியவந்தவுடன், ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு உடனடியாக செயல்பட்டது. குறிப்பிட்ட புலனாய்வு அமைப்பின் தொடர்புகள் துண்டிகப்பட்டது என்று அமைப்பின் தலைவர் மைக் பர்கஸ் கூறினார். ஆனால் எந்த நாட்டின் புலனாய்வு அமைப்பு என்பதை வெளியிட அவர் மறுத்துவிட்டார். மேலும் பேசிய அவர் ஆஸ்திரேலியாவுக்குள் வெளிநாட்டு குறுக்கீடு நடவடிக்கைகளை செயல்படுத்தியவர் ஒரு உள்நாட்டுக்காரர் என்றும் நிறைய செலவு செய்து இதுபோன்ற காரியங்களை அவர் செய்து வந்ததாகவும் மைக் பர்கஸ் தெரிவித்தார்.
இதனால் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களை கடுமையாக்க உள்ளதாகவும், சர்வதேசளவிலான அரசியலை சமாளிக்கும் பொருட்டு நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா புலனாய்வு அமைப்பு மேம்படுத்தும் என மைக் பர்கஸ் கூறினார்.
Link Source: https://bit.ly/3Lq02Nu