Breaking News

நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் இலவச ஆன்டிஜென் பரிசோதனையை QR CODE மூலம் மேற்கொள்ளும் திட்டம் : தற்காலிக நிறுத்தத்திற்கு பின்னர் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது

Plan to conduct free antigen testing in the state of New South Wales by QR CODE. reactivation after suspension

நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், தொற்று தொடர்பில் உள்ளவர்களை கண்காணிக்கும் வகையில் பல்வேறு முக்கிய இடங்களில் ஆன்டிஜென் பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ளும் திட்டத்தை மேற்கொண்டு வந்தது. இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் QR CODE மூலம் ஆன்டிஜென் பரிசோதனை செய்யும் திட்டத்தை தொடங்கி உள்ளதாக அம்மாகாண ப்ரீமியர் Dominic Perrottet தெரிவித்துள்ளார்.

Plan to conduct free antigen testing in the state of New South Wales by QR CODE. reactivation after suspension..பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையில் நடைபெற்ற தேசிய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மக்கள் அதிக அளவு கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ப்ரீமியர் Dominic Perrottet கூறியுள்ளார்.
மேலும் மாஸ்க் எந்தெந்த இடங்களில் கட்டாயம் என்ற அறிவிப்பையும் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 15ம் தேதி பல்வேறு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பில் வரும் தொடர்புகளை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும், இதனை களையும் வகையில் ஆன்டிஜென் பரிசோதனையை மருத்துவமனைகள், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் இலவசமாக செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும், இதனால் தொற்று பாதிப்பு ஏற்படும் நபர்களின் தொடர்புச் சங்கிலியை எளிதில் கண்டறிய முடியும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், ஆர்டிபிசிஆர் பரிசோதனையை தவிர்க்கும் மக்கள் ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொள்வதன் மூலமாக தொற்றுப்பரவல் மையம் உருவாவதையும், சமூகப்பரலாக மாறுவதையும் தடுக்க முடியும் என்றும் ப்ரீமியர் Dominic Perrottet தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/30VhoQ4