Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் காவலர்கள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிடை நீக்கம் செய்யும் விவகாரம் : கட்டாய உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய காவல் அதிகாரி

ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மாகாணங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குறிப்பிட்ட மாகாணங்களில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் காவலர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், செலுத்தத் தவறினால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அம்மாகாண அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.

Police in Western Australia fired for failing to vaccinate. Police officer seeks court injunction.இந்த உத்தரவை எதிர்த்து காவல் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் அரசு தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் இதுபோன்ற கட்டாய உத்தரவு பிறப்பித்ததை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். மனு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில், அரசின் உத்தரவுக்கு இணங்காமல் இருப்பதற்கு தரப்படும் தண்டனையாக இந்த பணியிடை நீக்கம் அமைந்திருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இது தடுப்பூசி செலுத்ததாவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் தண்டனை என்றும், இதனை அரசு அணுகும் முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் காவல் அதிகாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் யாரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் படவில்லை என்றும், எது சரி எது தவறு என்பதை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் அரசு தரப்பில் ஆஜரான சீனியர் கவுன்சில் Kenneth Pettit, தடுப்பூசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது வருந்த தக்கது என்றும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Police in Western Australia fired for failing to vaccinate. Police officer seeks court injunction..வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் முக்கியமானது தடுப்பூசி செலுத்தும் பணிகள் என்றும், தொற்று பரவலை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் காவல் துறையைச் சேர்ந்தவர்களே நீதிமன்றத்தை நாடி இருப்பது வருத்தத்தையும் அதிர்ச்சியும் அளிப்பதாக Kenneth Pettit கூறியுள்ளார். வழக்கை முடித்து வைக்குமாறு நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர் அறிவுறுத்த வேண்டாம் என்றும், மனுவை உரிய முறையில் விசாரிப்பதற்கான நடவடிக்கையை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

வைரஸ் பாதிப்பு காரணமாக முடக்க நிலை மற்றும் பொருளாதார பாதிப்புகளை மக்கள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், இது சம்பந்தப்பட்ட காவலர்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லையா என்றும் அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

காவலர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் அரசின் சீனியர் கவுன்சிலும் தங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்த நிலையில் நீதிபதி அனைத்தையும் பதிவு செய்துள்ளார்.

Link Source: https://ab.co/3yYXosc