Breaking News

மெல்போர்னில் தொற்று பரவும் அபாயம் உள்ள இடங்கள் : பட்டியலை வெளியிட்டு உஷார்படுத்திய சுகாதாரத்துறை

விக்டோரியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து அரசு ஈடுபட்டு வரும் நிலையில், திடீரென புதிய தொற்றுப்பரவல் மையமாக மெல்போர்ன் மாறியுள்ளது. தொற்றுக்கு ஆளான நபர்கள் பயணம் செய்த இடங்களை கண்டறிந்த தொற்றுத் தொடர்பு ஆய்வாளர்கள், தொற்றாளர்கள் சென்ற இடங்களில் உரிய நேரத்தில் அங்கு வந்து சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் கருணை பரிசோதனை செய்துகொண்டு நெகட்டிவ் என முடிவு வரும் வரை வெளியில் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Places at Risk of Infection in Melbourne. The Department of Health has published a list and highlightஅதன்படி, Maribyrnong-ல் உள்ள ஹைபாயின்ட் ஷாப்பிங் சென்டர், Bundoora-ல் ஜம்ப் – ஸ்விம் நீச்சல் பயிற்சி பள்ளி, உணவகங்கள், ப்யூட்டி பார்லர்கள், விளையாட்டு மைதானம், நீர்தேக்க நிலையங்கள் என 23 இடங்கள் டயர் 1, டயர் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த இடங்களில் குறிப்பிட்ட நேரங்கள் உடன் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் அந்த நேரத்தில் அந்த இடத்திற்கு வந்து சென்ற நபர்கள் தங்களை தொற்று பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப் படுத்திக் கொண்டு உடனடியாக தடுப்பு முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மெல்போர்ன் நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் Tier 1, Tier 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் சில தளங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அந்தந்த இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வருகை தந்தவர்கள் தங்களை உடனடியாக தனிமைப்படுத்திக. கொள்ளுமாறும், பரிசோதனை செய்து கொண்டு முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Link Source: https://ab.co/3wDR4El