Breaking News

மெல்போர்னில் மீண்டும் கொரோனா தொற்றுப்பரவல் : கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி ப்ரீமியர் ஜேம்ஸ் உத்தரவு

Corona pandemic back in Melbourne: Premier James orders tightening of controls

விக்டோரியாவில் புதிதாக நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது புதிய தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் மெல்போர்னின் வடக்குப் பகுதி முழுவதும் கட்டுப்பாடுகள். மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உரிய குடும்பத்தோடு தொடர்புடைய நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மெல்போர்னில் 26 கோவிட் பரிசோதனை மையங்கள் கூடுதல் நேரம் செயல்பட உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Corona pandemic back in Melbourne Premier James orders tightening of controlsஅதே நேரத்தில் மூன்று குடும்பங்களோடு தொடர்புடைய 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 வயதான ஒருவர் மூலமாகவே அனைவருக்கும் தொற்று பரவியதாகவும், இது புதிய தொற்று பரவலுக்கான மையமாக உருவெடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. வடக்கு ஆஸ்திரேலியாவில் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நபர் கடந்த மாதம் விக்டோரியாவிற்கு வருகை தந்திருந்த நிலையில் அவர் மூலமாகவே 60 வயது நபருக்கு தோற்று பரவியதாகவும் இந்த சங்கிலித் தொடர் உறுதிசெய்யப்பட்ட நிலையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது பிரீமியர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தனிமைப்படுத்துதலில் இருந்தவர்களில் நெருக்கமானவர்கள் சிலருக்கு தொற்று பாதிப்பு அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டு வருவதாகவும், இதுவே புதிய தொற்று மையமாக மாறும் அபாயம் உள்ளதாகவும் தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton கூறியுள்ளார்.

Corona pandemic back in Melbourne. Premier James orders tightening of controlsஇதனிடையே தொற்று பாதித்த நபர்கள் பயணித்த இடங்களில் இருந்து அவர்களோடு நெருக்கமாக தொடர்புடைய 168 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் விக்டோரியாவில் செயல்படும் 26 பரிசோதனை மையங்கள் கூடுதல் நேரம் செயல்பட்டு அதிக பரிசோதனைகள் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley கூறியுள்ளார்.

தகுதி வாய்ந்த நபர்கள் எவ்வித கால தாமதம் செய்யாமல் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதுவே தொற்று பரவலில் இருந்து பாதுகாப்பதற்கான சரியான வழி என்றும் பிரீமியர் ஜேம்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Link Source: https://ab.co/3p2aeBj