Breaking News

நியூ சவுத் வேல்ஸில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி போடு நடவடிக்கையில் நிகழ்ந்த குளறுபடி : மன்னிப்புக் கோரிய சுகாதாரத்துறை

Pfizer vaccine scam against school and college students in New South Wales, Health Department apologizes

சிட்னியில் பெருமைமிக்க சிட்னி கத்தோலிக் பள்ளியில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும் பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டது தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை மன்னிப்பு கோரியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான மாணவர்கள் என்னும் தடுப்பூசிக்கு தகுதி பெறாத நிலையில் அவர்களுக்கும் தவறுதலாக தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோன்று சிட்னியில் Hunter’s Hill  பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கடந்த மே மாதம் முதல் டோஸ் தடுப்பு ஊசி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரியின் கோரிக்கையை ஏற்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனம் சிட்னியில் மிக அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.

நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை ஏற்படுத்திய தடுப்பூசி மையம் ஒன்றில் தங்களது மாணவர்கள் அனைவரும் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இன்றும் பள்ளியின் முதல்வர் Ross Tarlinton கேட்டுக் கொண்டுள்ளார்.

Pfizer vaccine scam against school and college students in New South Wales Health Department apologizesபல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனத்தில் பயில்வதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வண்ணம் இந்த தடுப்பூசி நடவடிக்கையை மேற்கொள்ள நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத் துறைக்கு கோரிக்கை விடுத்ததாகவும், அந்த கோரிக்கையை முன்னுரிமை அடிப்படையில் இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பள்ளியின் முதல்வர் கூறியுள்ளார்.

இதனிடையே கடந்த மே மாதம் முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட 163 மாணவர்களில் வெளியூர்களிலிருந்து வந்து தங்கிப் படிக்கும் விடுதி மாணவர்கள் 12 பேருக்கு தவறுதலாக பைசர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் சுகாதாரத் துறையின் விதிமுறைகளின்படி தடுப்பூசிக்கு தகுதி இல்லாதவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடி தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே இனி இதுபோன்ற தவறுகள் நிகழாத வண்ணம் உரிய முறையில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: shorturl.at/jtFR4