Breaking News

நியூ சவுத் வேல்ஸில்மேலும் 18 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி : ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு புதன்கிழமை வெளியாக வாய்ப்பு

18 more confirmed in New South Wales. Curfew extension likely to be announced on Wednesday

தகவல் மூலமாக புதிதாக 18 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே புதன்கிழமை யோடு நிறைவடையும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் போடப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படும் அது தொடர்பான அறிவிப்பு காலதாமதமாக வெளியாகும் என்று நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார்.

18 more confirmed in New South Wales. Curfew extension likely to be announced on Wednesday,.மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் டெல்டா வகை வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் நாம் இந்தச் சூழலில் இருந்து வெளியேறுவது தொடர்பாக சிந்திக்க வேண்டுமே தவிர பாதிப்பு எண்ணிக்கை மற்றும் தற்போதைய சூழலை எண்ணி வருந்துவதில் பலனில்லை என்றும் பிரீமியர் கூறியுள்ளார். புதன்கிழமை வரை ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பு சுகாதார நிபுணர்கள் ஆலோசனைக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பிரிமியர் Gladys Berejiklian தெரிவித்துள்ளார். பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வரும் நிலையில் ஊரடங்கு நடவடிக்கைகளை நிறைவுக்கு கொண்டு வரும் முடிவை நியூ சவுத் வேல்ஸ் விரைவில் எடுக்கும் என்றும் பிரிமியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

18 more confirmed in New South Wales. Curfew extension likely to be announced on Wednesday.அதேநேரத்தில் தொற்று பரவல் பரிசோதனை எண்ணிக்கை சராசரியாக குறைக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு தொடர்பான விவரங்களை முழுவதுமாக அறிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தொற்று பரவல் தொடர்பில் உள்ளவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று நியூஸ் சவுதியில் தலைமை சுகாதார அதிகாரி Kerry Chant கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, Waterloo -ல் Meriton Suite நடைபெற்ற கேளிக்கை கொண்டாட்டத்தில் பங்கேற்ற 7 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களோடு தொடர்பில் இருந்த அனைவரும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு  தலைமை சுகாதார அதிகாரி Kerry Chant  கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஒரே இரவில் 32,000 பேருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: shorturl.at/aeESZ