Breaking News

ஆஸ்திரேலியாவில் பரவத் தொடங்கும் புதிய வகை கொரோனா வைரஸ் : பெரு நாட்டில் இருந்து 29 நாடுகளுக்கு பரவிய Lambda வைரஸ்

New type of corona virus starting to spread in Australia. Lambda virus that has spread from Peru to 29 countries

ஆல்பா, கப்பா, டெல்டா ஆகிய வைரஸ் வகைகள் தற்போது உள்ள நிலையில் புதியவகை உருமாற்றம் அடைந்த வைரசான Lambda தற்போது ஆஸ்திரேலியாவில் பரவத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி குழுவில் இடம்பெற்றுள்ள 11 மருத்துவ நிபுணர் குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இதனை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய வகை வைரஸ் மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்றும்,, இதனை எதிர்கொள்ள இரண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்வதே சரியான முடிவு என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்துதல் இருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த புதிய வகை வைரஸ் Lambda  கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

New type of corona virus starting to spread in Australia. Lambda virus that has spread from Peru to 29 countries.2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெரு நாட்டில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகை வைரஸ் தற்போது மேலும் 20 நாடுகளுக்கு பரவி இருப்பதாகவும், சிலி, அர்ஜென்டினா, ஈக்வேடார் உள்ளிட்ட நாடுகளில் மிக அதிக அளவில் புதிய வகை வைரஸ்  தொற்று பாதிப்பு காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. வட அமெரிக்கா பகுதியில் இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அந்த பகுதிகளில் அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மற்றவகை வைரஸ்களை விட இந்த புதிய வகை வைரஸ் மிக அதிக தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் இது மிக வேகமாக சமூக பரவல் மூலமாக பரவும் தன்மை கொண்டது என்றும் தொற்று நோயியல் நிபுணர் Kirsty Short கூறியுள்ளார்.

எத்தனை வகை வைரஸ் வந்தாலும் அதில் இருந்து தப்பிப்பதற்கான ஒரே ஆயுதமான தடுப்பூசியை நாம் அனைவரும் குறைந்த எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளில் இன்னும் இரண்டு டூல்ஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாகவும் ஆனால் புதிய வகை வைரஸின் பாதிப்பு மிகத் தீவிரமாகவும் வேகமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Link Source: shorturl.at/twAJM