Breaking News

5-11 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அவசர கால அனுமதி கோரி அமெரிக்க அரசிடம் பைசர் நிறுவனம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

Pfizer has applied to the US government for emergency permission to vaccinate children aged 5-11.

அமெரிக்காவில் பதிவாகும் தொற்றுகளில் சுமார் 27 சதவீதம் பேர் குழந்தைகள் உள்ளனர்.

இவர்களுக்கு பாதிப்பின் தீவிரம் குறைவாக காணப்பட்டாலும், இவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவக்கூடிய அபாயம் நிலவுகிறது.

இதை கருத்தில் கொண்டு 5 வயது முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு பல்வேறு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

Pfizer has applied to the US government for emergency permission to vaccinate children aged 5-11பைசர் மற்றும் பயோன் டெக் நிறுவனங்கள் இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வந்தனர். ஏற்கனவே பைசர் தடுப்பூசி 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அது பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது 28 லட்சம் குழந்தைகள் இந்த வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். பைசர் நிறுவனத்தின் விண்ணப்பம் குறித்து அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அமெரிக்காவின் FDA அமைப்பு கெடு விதித்துள்ளது. இதே போன்று ஆஸ்திரேலியாவிலும் விண்ணப்பங்களை வரவேற்பதாக ஆஸ்திரேலிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கிரேக் ஹண்ட் தெரிவித்துள்ளர்.

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 12-15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்கனெவே அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2268 சிறுவர்/ சிறுமியருக்கு பைசர் தடுப்பூசி செலுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறப்பான முடிவுகள் கிடைதிருப்பதாக் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குளிர் காலம் வருவதை முன்னிட்டு கொரோனவில் இருந்து குழந்தைகளை காக்க பல்வேறு நாடுகள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://bit.ly/30d420S