Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 70% பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் ஊரடங்கு தளர்வுகளை அறிவிப்பதற்கு புதிய அரசு தயாராகி வருகிறது.

ஆனால் இந்த தளர்வு அறிவிப்புக்கு ஆஸ்திரேலியா மருத்துவ கவுன்சில் அதிருப்தியை தெரிவித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் புதிதாக பொறுப்பேற்ற கொண்டுள்ள பிரிமீயர் Dominic Perrottet செய்தியாளர்களை சந்தித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் மாகாணத்தில் சுமார் 587 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார். நேற்று மட்டும் 8 பேர் உயிரிழந்த நிலையில்,
மாகாணத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தற்போது 911 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 181 பேர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் 11 பேர் செயற்கை சுவாசமும் பெற்று வருகின்றனர் நியூ சவுத் வேல்ஸ் மாகாண பிரிமீயர் Dominic Perrottet செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்போது பேசிய பிரிமீயர், மாகாணத்தில் தடுப்புசி சதவீதம் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டும் பொது மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டும் சில தளர்வுகளை அறிவிப்பதற்கு அரசு தயாராகி வருவதாக பிரிமீயர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் திட்டமிட்டு இந்த தளர்வுகளை அறிவிக்க வேண்டியது அவசியமாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை கருத்தில் கொண்டு வரும் திங்கட்கிழமை முதல் வீடுகளில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளில் இனி 10 பேர் வரை பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

The new government is preparing to announce a curfew relaxation as 70% of people in the state of New South Wales have been vaccinated against goiterதிறந்தவெளியில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளில் ஏற்கனவே இருந்த எண்ணிக்கை 20 என்பது 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்கில் சுமார் 100 பேர் வரை பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள் அதை அதை சார்ந்து மேற்கொள்ளக்கூடிய பயிற்சிகள் என்று அனைத்து நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 25ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண பிரிமீயர் தெரிவித்துள்ளார்.

கிண்டர் கார்டன் பள்ளிகள் வரும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாணத்தில் 80 சதவீதம் பேர் தடுப்பூசி செய்து கொள்ளக்கூடிய பட்சத்தில் மேலும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய மருத்துவக் கழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு அரசு இந்த சலுகைகளை அறிவித்து வருவதாகவும் மிக முக்கியமான தருணத்தில் அரசு கொடுக்கக் கூடிய இந்த தளர்வுகள் பொது மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என்று தெளிவுபடுத்தி உள்ளது .

குறிப்பாக 40 வயதுக்கு குறைவானவர்களே தொற்று பரப்ப கரணமாக இருப்பதாகவும், ஆனால் ,அவர்களில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கு இன்னும் எட்டப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .

தற்போது ஊரடங்கு திங்கட்கிழமை வரை பல இடங்களில் நீட்டிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Link Source: https://bit.ly/3mWOS7N