Breaking News

ஆஸ்ரேலிய முன்னாள் பிரதமர் Tony Abbott -ன் தைவான் பயணம் : மோரிசன் அரசில் இருந்து எழுந்துள்ள கடுமையான விமர்சனங்கள்

Former Australian PM Tony Abbott visit to Taiwan. harsh criticism from Morrison government

சீனா ராணுவம் தனது போர் விமானங்களை தைவானில் பறக்கவிட்டு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சீனாவுக்கு ஜெர்மனி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் Tony Abbott தைவானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு நடைபெற்ற சர்வதேச நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் தனது கருத்துக்களையும் பதிவு செய்திருந்தார்.

Former Australian PM Tony Abbott visit to Taiwan. harsh criticism from Morrison government.இந்நிலையில் இதுபோன்ற சூழலில் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் தனக்கு பயணம் மேற்கொண்டது கண்டனத்திற்கு உரியது என்று ஸ்காட் மோரிசன் அரசிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீனாவுக்கு எதிராக அமெரிக்கா பிரிட்டன் ஆஸ்திரேலியா ஆகியவை இணைந்து ஆக்கஸ் கூட்டு திட்டத்தின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியா தற்போது வெளிப்படையாக தலைவனுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் மேற்கொண்டிருக்கும் இந்த பயணம் தற்போதைய சூழலில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்று ஸ்காட் மோரிசன் அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட நபராக தைவான் சென்ற ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் அங்கு தைவான் அதிபர்
Tsai ing-wen மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது தற்போதைய சூழலில் தேவையற்றது என்று ஆஸ்திரேலிய கேபினட் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tony Abbott-ன் இந்த பயணம் தொடர்பான நடவடிக்கைகளை மிகத் தீவிர கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும், அரசியல் ரீதியாக இது எந்த வகையிலும் இருநாட்டு உறவுகளுக்கு உதவாது என்றும் மூத்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Former Australian PM Tony Abbott visit to Taiwan. harsh criticism from Morrison government..அதேநேரத்தில் தைவான் அதிபர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் நடத்தியிருக்கும் பேச்சுவார்த்தை என்பது சர்வதேச எல்லைப் பாதுகாப்பு வர்த்தகம் உள்ளிட்டவை குறித்தும் இருப்பதால், அவை CPTPP எனப்படும் வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்த கூடாது என்றும் ஆஸ்திரேலிய அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் Tony Abbott பயணம் தொடர்பாக வரவேற்பு தெரிவித்துள்ள மற்றொரு முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull, இது அவசியமான பயணம் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதே பொது மன்ற நிகழ்வில் தான் பங்கேற்று உரையாற்றிய தாகவும் தற்போது Tony Abbott சென்று இருப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தைவானில் சீனா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து பல்வேறு நாடுகளும் கண்காணித்து வருகின்றனர். இதேபோன்று உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் தைவான் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன.

Link Source: https://ab.co/3am2vrb