Breaking News

பறிகொடுத்த இரட்டை சதம் பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமான்!

The double hundred that was snatched away

தென்ஆப்பிரிக் மற்றும் பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் தொடர் விளையாடி வருகிறது அதில் முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி ஜொகான்னஸ்பர்க் மைதானத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது

பேட்டிங்கை தொடர்ந்தது தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 341 எடுத்து, இதைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி இடம் தோற்றது, இதன்மூலம் தொடர் 1-1 சமன் நிலையில் ஆனது.

Pakistan's Fakhar Zaman missed double century 1ஃபக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இறங்கிய நிலையில் இமாம்-உள்-ஹாக் தனது விக்கெட்டை 2-வது ஓவரிலேயே விட்டுக் கொடுத்தார், பாகிஸ்தான் அணி தனது 15-வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் யாரும் ரன் குவிக்க தடுமாறிய நிலையில், பக்கர் ஜமான் கூடுதல் பொறுப்போடு விளையாடிக் 70 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அரைசதம் கடந்த பக்கர் ஜமான், பின் 107 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் சதம் கண்டார்.

Pakistan's Fakhar Zaman missed double centuryதன் அதிரடி ஆட்டத்தால் அடுத்த 48 பந்துகளில் 93 ரன்களை விளாசி பாகிஸ்தானை வெற்றிக்கு அருகில் அதுவும் தனிநபராக கொண்டு சென்று கொண்டிருந்தார், வெற்றிபெற்ற 50 வது ஓவரில் 31 தேவை என்ற நிலையில் பாகிஸ்தான் அணி விளையாடிக்கொண்டிருந்தது போது ஃபக்கர் ஜமான் எதிர்பாராத நிலையில் குயின் டிகாக் சூழ்ச்சியின் காரணமாக ரன் அவுட் ஆனார், அவர் லாங் ஆனுக்கு தட்டி விட்டு வேகமாக ரன்களுக்கு ஓடும்போது லாங் ஆன் பீல்டர் மார்க்ரம் பந்தை நேராக கீப்பர் முனைக்கு விட்டெறிந்தார். பகார் ஜமான் கிட்டத்தட்ட கிரீஸ் பக்கம் வந்து விட்டார், ஆனால் அப்போது குவிண்டன் டி காக் பவுலர் முனைக்கு அடி என்பது போல் செய்கை செய்ய, அதை ஓடி வந்து கொண்டே திரும்பிப் பார்த்தார் ஃபக்கர் ஜமான், இதனையடுத்து ஓட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது, பந்து நேராக விக்கெட் கீப்பர் முனை ஸ்டம்பை தாக்கியது மிக அருமையான த்ரோ.

பாகிஸ்தான் அணியின் தனிநபர் அடித்த அதிக ரன் அன்வர் அடித்த 194 இருந்த நிலையில் ,ஃபக்கர் ஜமான் தனது அதிரடி ஆட்டத்தால் இரட்டை சதம்
கடப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலையில் 193 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார் .

இரட்டை சதம் கண்டவர்கள் இந்தியர்கள் மட்டும் அதுவும் சச்சின் சேவாக் ரோகித் குறிப்பிடத்தக்கது