Breaking News

NSW மாகாண அரசு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த மிகப்பெரிய தடுப்பூசி முகாமை அமைக்கவுள்ளது.

NSW government to establish COVID-19 'mass vaccination hub' in Homebush

Homebush, Sydney Olympic Park ல் அமையவுள்ள இந்த சிறப்பு முகாமில் மாநில மக்கள் தொகையின் 50% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இந்த மையம் அமைக்க Sydney Olympic Park நிர்வாகத்துடன் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று NSW மாகாண அரசு தெரிவித்துள்ளது.

The NSW provincial government will set up the largest vaccination camp to expedite the vaccination of people.இத்திட்டம் குறித்து பேசிய NSW மாகாண முதல்வர் Gladys, இந்த வார இறுதிக்குள் 3லட்சம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மாநிலத்திலுள்ள மீதமுள்ள 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தக்கூடிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

தங்களுக்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசு வழங்கும்பட்சத்தில் அக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்படும் என்று அவர் தெரிவித்தார்.

The NSW provincial government will set up the largest vaccination camp to expedite the vaccination of peopleஆனால் மத்திய அரசு தடுப்பூசிகளை உரிய காலத்திற்குள் தடையில்லாமல் வழங்கினால், இந்த சிறப்பு முகாமிலும், மாகாணம்.முழுவதும் அமைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்களின் மூலமாக மக்களுக்கும் செலுத்தப்படும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் Gladys தெரிவித்துள்ளார்.

தற்போது வரை NSW மாகாணத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும், இந்த வார இறுதிக்குள் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

New South Wales Provincial Health Minister Hazard spokeநியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் Hazard பேசியபோது இந்த சிறப்பு முகாமுக்கு தேவையான கூடுதல் தடுப்பூசியை வழங்குவது குறித்த எந்த அறிவிப்பும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படக்கூடிய தாமதம் குறித்து மத்திய மாநில அரசுகள் இடையே மோதல் நிலவி வரக்கூடிய நிலையில் ஏப்ரல் மாதத்திற்குள் 40 லட்சம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்ற மோரிஸ் அரசின் இலக்கு தற்போது வரை நிறைவேறவில்லை. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் புதன்கிழமை மட்டும் சுமார் 6,794 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை NSW வில் 1, 34,323 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.