Breaking News

கொரொனா கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி ஆஸ்திரேலிய நாட்டினரை அனுமதிக்க நியூசிலாந்து முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா தற்போது கொரொனாவிலிருந்து மீண்டு பாதுகாப்பான நாடாக அறியப்படுவதால் எல்லைகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern கூறியுள்ளார்.

கொரொனா கட்டுப்பாடுகள் கடுமையாக தொடங்கியதில் இருந்து அடைந்து கிடைக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு இந்த அறிவிப்பு வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்கி உள்ளது.

New Zealand has decided to allow Australians without corona restrictionsஅதே நேரத்தில், Travel Bubble என்று அழைக்கப்படும் சாலை, வான் வழி, நீர் வழி எல்லைகள் திறக்கப்படுவதால் அடுத்து பயணம் மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் உள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு பாராளுமன்றம் மேற்கொண்டு வரும் திட்டங்கள் மிகவும் முக்கியமானவை என்றும், அவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன், தொலைநோக்காக சிந்தித்து செயல்படுவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் Dan Tehan தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தாங்கள் பல்வேறு நாடுகளுடன் பேசி வருவதாகவும், அந்நாட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும் சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் Ong Ye Kung கூறியுள்ளார். தங்கள் நாட்டிற்கு வருகை புரிவோர் கொரனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை நேரிலோ அல்லது டிஜிட்டலாகவோ சமர்ப்பிக்க வேண்டும் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஒங் யே குங் தெரிவித்துள்ளார்.

New Zealand has decided to allow Australians without corona restrictions. 1மேலும், பல்வேறு நாடுகளுக்கான விமானப் போக்குவரத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பானதாக உணரும் பட்சத்தில் மீண்டும் உலக நாடுகள் உடனான தொடர்பை சிங்கப்பூர் புதுப்பிக்கும் என்றும் ஒங் யே குங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரை அடுத்து ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளை அனுமதிக்கும் திட்டம் உள்ளதாகவும், அந்நாடுகள் கொரொனாவை சிறப்பாக கையாண்டதாகவும் அமைச்சர் Tehan தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தலைமை மருத்துவ அதிகாரி தீவிரமாக கண்காணித்து அறிக்கை அளிப்பதன் அடிப்படையில் சிங்கப்பூர், ஜப்பான், சவுத் கொரியா போன்ற நாடுகளுக்கான எல்லை திறப்பு குறித்து அடுத்தடுத்து முடிவெடுப்போம் என பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளார்.