Breaking News

ஆஸ்திரேலியாவில், தேசிய பெண்கள் பாதுகாப்பு மாநாடு ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கெதிரான குற்றங்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான வன்முறைகளை குறைக்கும் நோக்கத்தில் தேசிய கொள்கை வகுக்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்தாண்டு நடைபெறவுள்ள மாநாடு பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவமற்ற நிலையை களைய மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை வகுப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது..

மத்திய அரசின் பெண்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் Anne Ruston மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையின் இறுதியில் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் பெண்களுக்கு எதிராக குடும்பங்களிலும், சமூகத்திலும் நடைபெறும் வன்முறைகள் குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துகளின் அடிப்படையில் அரசு சார்பில் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுக்க திட்டங்கள் வகுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டறியும் விதமாக ஆன்லைன் மூலமாக ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் ஆலோசனை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Premier Annastaciaசமூகத்தில் ஆண் பெண் இடையே காணப்படும் ஊதிய குறைப்பாட்டை களைய உரிய வழிமுறைகள் காணப்பட வேண்டும் என்று குயின்ஸ்லாந்து மாநில முதல்வர் Premier Annastacia தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த Senator Ruston ஒற்றை இலக்கினை அடிப்படையாக கொண்டு இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் மாநிலங்களின் கருத்துகளும் கேட்டறியப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அடங்கிய தொகுப்பு நிதி உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலமாக பாதிக்கப்படும் பெண்களுக்கு தற்காலிக விசா மற்றும் சட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கம் மூலமாக 3000ஆயிரம் டாலர்கள் வரை உதவித்தொகை கிடைக்கும் என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் சோதனை அடிப்படையில் 1 வருடத்திற்கு நடைமுறைபடுத்தப்படும் என்றும், ஆயிரம் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தற்காலிக விசாவில் தங்கியிருக்கும் குறிப்பிட்ட 9 பிரிவினருக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று காலத்தில் வீடுகளில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் அதிகரித்திருப்பதாக வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்கள் உரிமைகளுக்காக போராடக்கூடிய பல அமைப்புகள் கோவிட் காலத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ கூடுதல் நிதி வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

இத்துறைக்கு 150 மில்லியன் டாலர்கள் அடங்கிய தொகுப்பு நிதி அண்மையில் வழங்கப்பட்டாலும், வரும் ஜூன் மாதத்துடன் இத்திட்டம் நிறைவடைகிறது..

Treasurer Josh Frydenbergபூர்வக்குடி மக்களுக்காக போராடி வரும் Ash Johnstone எனவர் கோவிட் காலகட்டங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

பெண்கள் பாதுகப்பு துறைக்கு தேவையான கூடுதல் நிதி குறித்து Treasurer Josh Frydenberg தேவையான தருணங்களில் இத்துறைக்கு தேவையான நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளர்.