Breaking News

கொரோனா பரவல் காரணமாக உலகின் இரண்டாம் நிலை டென்னீஸ் வீரரான நோவோக் ஜோக்கோவிச் ஏ.டி.பி மாஸ்டர் 1000 விளையாட்டு தொடரில் இருந்து விலகியுள்ளார்.

செர்பிய நாட்டு டென்னிஸ் வீரரான நோவோக் ஜோக்கோவிச் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் உள்ளார். இதனால் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கிராண்டு ஸ்லாம் தொடரில் இருந்து அவர் பாதியிலே வெளியேறும் நிலை ஏற்பட்டது.

அவர் தடுப்பூசி போடாமல் இருப்பதன் காரணமாக அவர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அதை தொடர்ந்து ஏ.டி.பி தொடரில் பங்குகொள்ள இருந்தார். அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் இந்த விளையாட்டுத் தொடர் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளததன் காரணமாக நோவோக் ஜோக்கோவிச்சுக்கு நோய்கள் கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஜோக்கோவிச், நான் மீண்டும் விளையாடுவதைப் பார்க்க எனது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன், விரைவில் அவர்களுக்காக விளையாடுவேன் என்று நம்புகிறேன். அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஏ.டி.பி தொடரில் விளையாடும் அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3J5mKJc