Breaking News

ரஷ்யாவுடன் சீனா மேற்கொண்டு வரும் சிக்கலான உறவு ஆஸ்திரேலியாவுக்கான அச்சுறுத்தல் : உலக அளவில் தனது முதன்மையை நிருபிக்க சீனா கடும் முயற்சி மேற்கொண்டு வருதாகவும் ஆஸ்திரேலிய உளவுத்துறை அதிகாரி தகவல்

China's complicated relationship with Russia is a threat to Australia. China is working hard to prove its global dominance, according to an Australian intelligence official.

ஆஸ்திரேலியாவின் நிதி, வணிகம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய தேசிய உளவுத்துறை அமைப்பின் பொது இயக்குநர் Andrew Shearer சீனா குறித்த பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதில், சீனா தற்போது போர் சூழலில் ரஷ்யாவுடன் மேற்கொண்டு வரும் சிக்கலான உறவு என்பது ஆஸ்திரேலியா போன்ற தாராளவாத ஜனநாயக நாடுகளுக்கு ஆபத்தானது என்று Andrew Shearer கூறியுள்ளார்.

China's complicated relationship with Russia is a threat to Australia. China is working hard to prove its global dominance, according to an Australian intelligence official..மேலும் இந்த அச்சுறுத்தல் பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் என்றும், உலக அளவில் தனது இருப்பையும், முதன்மையையும் நிறுவும் வகையில் பல்வேறு முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருவதாகவும் உளவுத்துறை இயக்குநர் Andrew Shearer தெரிவித்துள்ளார். வல்லரசு நாடானா அமெரிக்காவை முந்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைளை சீன அதிபர் Xi Jinping தலைமையிலான அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், அதன் வாயிலான கூட்டமைப்பில் உள்ள ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அதன் பாதிப்பு எதிரொலிக்கும் என்றும் Andrew Shearer தெரிவித்துள்ளார்.

சீனாவின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க உளவுத்துறை தகவல்களை திரட்டி உள்ளதாகவும் அதன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மேற்கொள்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு ரகசியமாக சில ஆதாய ஒப்பந்ததங்களை இரு நாடுகளும் மேற்கொண்டதாகவும் உளவுத்துறை இயக்குநர் Andrew Shearer கூறியுள்ளார்.

China's complicated relationship with Russia is a threat to Australia. China is working hard to prove its global dominance, according to an Australian intelligence official...பெய்ஜிங் – மாஸ்கோ இடையிலான சிக்கலான ஒரு புதிய நடவடிக்கையை ஒப்பந்தத்தின் வாயிலான சரி செய்ய முயலுவதாகவும், அதன் வடிவமாகவே இரு நாடுகளுக்கும் இடையிலான நடவடிக்கைகள் பார்க்கப்படுவதாகவும் Andrew Shearer தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்து வரும் போர் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் கடுமையான பொருளதார நடவடிக்கைகள் சீனா கண்காணித்து வருவதாகவும், இந்தோ பசிபிக் பிராந்தியம் மற்றும் இதர விவகாரங்களில் இது எதிரொலிக்காமல் தடுக்கும் வகையிலான நடவடிக்கையை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டு என்றும் கூறப்படுகிறது.

Link Source: https://ab.co/3tQOtHl