Breaking News

நியூசிலாந்து தனது அதிகாரபூர்வமாக Pfizer – BioNtech தடுப்பூசியை போட ஆரம்பித்துள்ளது !

நியூசிலாந்து தனது அதிகாரபூர்வமாக Pfizer – BioNtech கொரோனா தடுப்பூசியை போட ஆரம்பித்துள்ளது. முன்கல பணியாளர்கள் மற்றும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முன் மருத்துவர்களுக்கு செலுத்தப்பட்டது. இது மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கையை கொடுக்கும் என்று அரசு நினைத்தது.

New Zealand has officially launched its Pfizer - BioNtech vaccineநியூசிலாந்தின் Director of General of Health Ashley Bloomfield கூறுகையில், எங்களுடைய வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாளாகும். இன்று மிகப்பெரிய நோய்த்தடுப்பு திட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம். முதலில் இராணுவ வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் மக்களை பாதுகாக்கிறோம். எங்களுடைய வழி சரியானதா என்பதை உறுதிபடுத்த சில நாட்கள் இதை பின்பற்றுவோம் என்றார்.

நாட்டின் உள்ள 5 மில்லியன் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஒரு முழு ஆண்டு ஆகும் என நியூசிலாந்து அரசு எதிர்பார்க்கிறது. ஆஸ்திரேலியாவை தொடர்ந்து கொரோனா வைரசை தடுப்பதில் நியூசிலாந்தும் உலக நாடுகளில் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளது. நியூசிலாந்தில் 2350 வழக்குகளில், 26 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியாவில் 29000 வழக்குகளில் 909 மக்கள் இறந்துள்ளனர். ஆக்லாந்தில் ஊரடங்கை தள்ளிவைப்பதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.