Breaking News

தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை புறக்கணியுங்கள்-Brett Sutton

brett sutton

ஆஸ்திரேலியாவில், COVID-19 தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை புறக்கணிக்குமாறு விக்டோரியாவின் Chief Health Officer Brett Sutton கூறினார்.

ஆஸ்திரேலியர்கள் COVID-19 jabs தொடங்க இருக்கும் சில நாட்களுக்கு முன் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். சனிக்கிழமையன்று மெல்போர்னில் உள்ள Fawkner பூங்காவில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் காணப்பட்டனர். அப்போது 20 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 15 பேர் தலைமை சுகாதார அதிகாரியின் உத்தரவுகளை மீறியதாகவும், 5 பேர் காவல்துறைக்கு இடையூறு விளைவித்தாகவும் கூறி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ,Prof Sutton கூறுகையில், தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மிக குறைந்த அளவே. எனவே அவர்களை தாம் புறக்கணிப்பதாகவும், மக்களும் இதை பின்பற்றுமாறு கூறினார். ஆஸ்திரேலியாவிலிருந்து கொரோனாவை விரட்டுவதற்கு இந்த தடுப்பூசி திட்டம் பெரும் பங்கு வகிக்கும். மக்களுக்கு இதைப்பற்றிய சந்தேகங்களை நம்பிக்கையான ஆதாரங்களிலிருந்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

மெல்பர்னின் பேரணியில் அதிகாரிகள் எதிர்ப்பாளர்களின் மேல் மிளகாய்பொடியை தூவி ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் சில சமயம் அவர்களது கட்டுப்பாடு அவர்களது இழந்ததாக தோன்றியது. அங்கு இருந்த நபர் கூறுகையில், பேச்சாளர்கள் கடவுள் அவர்கள் பக்கம் இருப்பதாகவும், இது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான சண்டை என்றும் கூறியதாக கூறினார்.

இந்த திட்டத்தை எதிர்த்து அமைக்கப்பட்ட குழு Reignite Democracy Australia. இந்தஅமைப்பு எதிர்ப்பாளர்களுக்கு தனது வாழ்த்தை கூறியதாக கூறப்படுகிறது. இதே போன்று கலவரம் முக்கியமான நகரங்கள் Cairns, Coffs Harbour மற்றும் Albany-யிலும் ஏற்பட்டது.
நூற்றுக்கும் அதிகமான எதிர்ப்பாளர்களில் சமையல்காரரும், சதி செய்யும் ஆட்களில் ஒருவருமான Pete Evans ம் Sydney’s Hyde பூங்காவில் இருந்தார்.

கொரோனாவை பற்றியும், அதன் தடுப்பூசி பற்றியும் தவறான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக கூறப்படும் Pete Evans தான் சிட்டினியில் கூட்டத்தில் உரையாற்றியவர். எதிர்ப்பாளர்கள், தடுப்பூசி ஒரு ஏமாற்று வேலை. உங்கள் உடல்நிலை உங்கள் விருப்பம் போன்ற பலகையுடனும், முழக்கத்துடனும் அணி வகுத்து சென்றனர்.