Breaking News

புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணம் : தென் ஆப்ரிக்காவில் இருந்து வரும் விமானங்களை நிறுத்தி வைக்கிறது ஐரோப்பிய யூனியன்

New type of corona virus threat cause. European Union suspends flights from South Africa

புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் விமானங்களை நிறுத்தி வைத்து ஐரோப்பிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் பரவக்கூடிய புதிய வகை வைரஸ் காரணமாக ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து பயணம் மேற்கொள்வோருக்கு தடை மற்றும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய யூனியன் பிரிட்டன் மற்றும் இந்தியாவில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ள நிலையில், அங்கிருந்து வருபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், விமானங்களை ஐரோப்பிய யூனியனிலேயே நிறுத்திவிடுமாறும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்
Ursula von der Leyen கேட்டுக்கொண்டுள்ளார்.

New type of corona virus threat cause. European Union suspends flights from South Africa.திரிபு வகை வைரஸ் B.1.1.529 காரணமாக பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையத்திலேயே நிறுத்தப்படுவதாகவும் Ursula von der Leyen கூறியுள்ளார். மூலவகை கொரோனா வைரஸிலிருந்து புதிய வகை வைரஸ் முற்றிலும் வேறுபட்டு இருப்பதாகவும் இது வீரியம் மிக்க வயிறாக இருப்பதால் தடுப்பு ஊசி செலுத்தி அவர்களுக்கும் இந்த வகை வைரஸ் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிய வகை வைரஸின் தாக்கம் தொடர்பாக ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனம் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. அதில் புதிய வகை வைரஸின் திரிபு நிலை குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் நிபுணர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை கணக்கில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் பல்வேறு நாடுகளுடனான பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3d1AQgg