Breaking News

ஏனைய நாடுகளை தங்கள் துணை நாடுகளைப் போலவே பார்க்கிறது சீனா : ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் Peter Dutton குற்றச்சாட்டு

China sees other countries as its allies. Australian Defense Minister Peter Dutton.

தைவான் குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் Peter Dutton கூறிய கருத்துக்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த Peter Dutton, சீனா ஆஸ்திரேலியா உள்ளிட்ட மற்ற நாடுகளை தங்களது துணை நாடுகளைப் போலவே பார்ப்பதாகவும், தைவானை தனது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் ஒட்டுமொத்த ஆசிய கண்டத்தில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். அதே போன்று தைவான் அவர்களது கட்டுக்குள் சென்று விட்டால் மற்ற மாகாணங்களையும் அவர்கள் விரைவில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்றும் Peter Dutton எச்சரித்துள்ளார்.

சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மற்ற அண்டை நாடுகளின் உதவியோடு தடுப்பதே ஆஸ்திரேலியாவின் விருப்பம் என்றும், உள்நாட்டில் அமைதியை ஏற்படுத்தவே ஆஸ்திரேலியா விரும்புகிறது என்றும் Peter Dutton கூறியுள்ளார்.

தைவான் மீது படையெடுப்பு நடத்தி ஆக்கிரமிக்கும் பட்சத்தில் பிரச்சனைக்குரிய பகுதிகளான Senkaku தீவு உள்ளிட்ட இடங்களை சீனா தனது ஆதிக்கத்தின் கீழ் விரைவில் கொண்டு வந்துவிடும் என்றும் Peter Dutton எச்சரித்துள்ளார்.

China sees other countries as its allies. Australian Defense Minister Peter Duttonநாட்டின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் அதற்கான சூழலை ஏற்படுத்த முயற்சி செய்வோரை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் Peter Dutton கூறியுள்ளார். தைவானை பாதுகாக்கும் தேவை வந்தால் அமெரிக்காவுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா மேற்கொள்ளும் என்றும் Peter Dutton உறுதி அளித்துள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையே மோதலை தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவிப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது. மேலும் சீனாவின் வெளியுறவுக் கொள்கையை சரியாக புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருவதாக Peter Dutton -க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆக்கஸ் ஒப்பந்த விவகாரத்தில் ஏற்கனவே ஆஸ்திரேலியா மீதான கோபத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி வரும் சீனா தற்போது ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சரின் கருத்துக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அரசு தேவையற்ற குழப்பத்தை விளைவிக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் அமைதி பாதுகாப்பு நிலைத்தன்மை உள்ளிட்ட விவகாரங்களில் உறுதி செய்து கொள்வதற்காக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அதே நேரத்தில் குறிப்பாக சீனாவும் விவகாரத்தில் அந்த உறுதித் தன்மையை தொடர்ந்து நிலைநாட்டுவோம் என்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் Peter Dutton திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3liDUJo