Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மத்திய வடக்கு கடல் பகுதியில் சுறா தாக்கி அலைச்சறுக்கு வீரர் பலி : மற்ற வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

New South Wales Central North Sea shark kills surfer, Other players advised to be cautious

நியூ சவுத் வேல்ஸ் மத்திய வடக்கு கடல்பகுதியான Tuncurry-ல் சிட்னி வடக்கு கடற்பகுதியை சேர்ந்த 59 வயதான அலைச்சறுக்கு வீரர் சுறா தாக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையிலிருந்து மருத்துவ அவசர தேவைக்கு அழைக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் குழு விரைந்து சென்று உயிர் காக்கும் அவசர சிகிச்சை மேற்கொண்டனர். ஆனாலும் சுறா கடித்ததில் 59 வயதான நபர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அதேநேரம் சுறா கடித்த பின்பு அவர் மற்ற அலைச்சறுக்கு வீரர்களை எச்சரித்து கரைக்குச் செல்லுமாறு கூறியதாகவும் சக வீரர்கள் கூறியுள்ளனர். ஆனால், கரைக்கு கொண்டு வந்த பின்னர் அவர் உயிருடன் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

New South Wales Central North Sea shark kills surfer. Other players advised to be cautiousசுறா தாக்குதலுக்கு ஆளான பின்பு சக நண்பர்கள் அவரை விரைந்து சென்று கரைக்கு அழைத்து வந்து விட்டதாகவும், ஆனால் அவரது வலது தொடையில் பலத்த காயத்துடன் சுறா இருந்ததாகவும் இதன் காரணமாக அவர் உயிர் பிழைப்பது சிக்கல் ஏற்பட்டதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். உயிரிழந்த நபரின் புகைப்படங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து உரிய விசாரணை நடத்தப்பட்டு அந்த பகுதியில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது. இதனையடுத்து அடுத்த 24 மணி நேரங்களுக்கு கடற்கரை பகுதியில் அலைச்சறுக்கு செய்ய தடை விதிக்கப்பட்டது.

அலைச்சறுக்கு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ட்ரோன் கேமராக்கள் மூலமாக சுறா மீன்கள் தாக்குதல் கண்காணிக்கப்படும் என்றும் முதன்மை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள மொபைல் ஆப் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பின்பற்றுமாறு, அலைச்சறுக்கு வீரர்களுக்கும் கடற்கரைக்குச் செல்பவர்களுக்கும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Link Source: https://ab.co/3hDSlH8