Breaking News

சீக்கிய மாணவர்கள் கிர்பான் வைத்துக்கொள்ள தடை : ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு

Sikh students banned from wearing kirpan Australian Education Minister orders action

சிட்னியின் க்ளென்வுட் உயர்நிலைப்பள்ளியில் 14 வயது சிறுவன் 16 வயது சிறுவனை கிர்பானை வைத்து குத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து என்.எஸ்.டபிள்யூ கல்வி அமைச்சர் சாரா மிட்செல் இந்த தடையை அறிவித்துள்ளார்.
சீக்கியர்கள் தங்களுடன் எப்போதும் வைத்திருக்கும் ஆயுதம் மூலம் நடந்த கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் அனைத்து பள்ளிகளிலும் கிர்பான் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

Sikh students banned from wearing kirpan Australian Education Minister orders action.மாணவர்களிடையே மதிய உணவு நேரத்தில் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது 14 வயது சிறுவன் ஒரு கிர்பனை வெளியே எடுத்து மற்றொரு சிறுவனை இரண்டு முறை குத்தியதாக போலீசார் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு முதுகு மற்றும் வயிற்றில் குத்தப்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கிர்பன் என்பது ஒரு சிறிய வளைந்த கத்தி ஆகும். இது தங்களைக் காத்துக் கொள்வது அல்லது ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டிய ஒரு சீக்கியரின் கடமைக்காக அவர்கள் எப்போதும் உடன் வைத்துள்ளனர்.

இந்த அறிவிப்பை வெளியிடும் போது, மிட்செல், தற்போது மாணவர்கள் என்.எஸ்.டபிள்யூ பள்ளிகளில் கிர்பான்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் சட்டம் தவறு என்று கூறினார். அது இப்போது அவசர சட்டத்தின் மூலம் தடை செய்யப்படுகிறது. பின்னர் சட்டத் திருத்தம் மூலம் சட்டசபையில் நிறைவேற்றப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

சிட்னியின் சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகளுடன் பேசிய அவர், கத்திக்குத்து சம்பவத்தால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக கல்வி அமைச்சர் சாரா கூறினார்.

கிர்பான் மூலம் நடக்கும் தாக்குதல் அங்கு அரிதானது. ஆனால் மிட்செல், தடையை கொண்டுவருவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாகக் கூறினார். தடை குறித்த செய்தியால் உள்ளூர் சீக்கிய சமூகம் ஏமாற்றமடைந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

Link Source: https://bit.ly/3bCmtio