Breaking News

ஆஸ்திரேலியாவில் இன்றும் தொடரும் நவீன முறை அடிமைத்தனம் : வெளியேற போராடும் பெண்ணின் வாழ்க்கை குறித்த அதிர்ச்சித் தகவல்கள்

கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் அடிமைகளாக நடத்தப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பணியாட்களை அடிமைகளாக நடத்துவோர் மீது கைது நடவடிக்கையும் பாய்ந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் 15 ஆயிரம் பேர் நவீன அடிமைகளாக நடத்தப்பட்டு வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரண்யா, அனைத்து பெண்களைப் போலவும் தன்னுடைய திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை ஆஸ்திரேலியாவில் கழிப்பதற்காக வந்த ஒரு சாதாரண பெண்.

Modern-day slavery continues in Australia today. shocking information about the life of a woman struggling to escape,.தென் கிழக்கு ஆசிய பகுதியைச் சேர்ந்த ஆரண்யா திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் ஆஸ்திரேலியாவின் Geelong வந்த நிலையில் இயல்பான மணவாழ்க்கை தொடங்கி இருக்கிறார். விடுமுறை ஒன்றிற்காக மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பிய போது அங்கு விவாகரத்து கோரி கணவர் மனு செய்துள்ளார்.

ஆனால் விவாகரத்து கொடுக்காமல் தன்னை மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரும்படியும் அங்குதான் ஏதேனும் வேலை செய்து இருந்து கொள்வதாகவும் ஆரண்யா கூறியுள்ளார். வீட்டு வேலைகளுக்காக சென்ற அனன்யா மிகவும் சொற்ப சம்பளத்தில் நவீன அடிமையாக நடத்தப்பட்டு உள்ளார். வெறும் 100 டாலர் ஊழியத்தில் வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்ய அவர் பணிக்கப் பட்டுள்ளார்.

மேலும் பேருந்தில் பயணம் செய்யும்போது சந்தித்த பெண் ஒருவரின் அறிமுகத்தின் அடிப்படையில் அவர் ஆதரவுக் கரம் நீட்டுவது போல ஆர்யாவை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி செய்துள்ளார். மசாஜ் சென்டர் ஒன்றில் பணியாற்றிய போது அங்கு இருந்து தப்பிப்பதற்கான வழி தெரியாமல் சிக்கி தவித்துள்ளார் ஆரண்யா.

தான் தங்கியிருந்த வீட்டுக்கான 9 ஆயிரம் டாலர் வாடகை கூட இன்னும் செலுத்த முடியாத நிலையில் உள்ளார் ஆரண்யா.

Modern-day slavery continues in Australia today. shocking information about the life of a woman struggling to escape..விக்டோரியா மற்றும் தாஸ்மானியா பகுதியில் அதிகரித்து வரும் நவீன அடிமைமுறை குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்று உள்ள சிலரை இது போன்ற நவீன அடிமைகளாக நடத்துவதற்கு சில குழுக்கள் செயல்படுவதாகவும் அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Link Source: shorturl.at/fsxzV