Breaking News

மெல்போர்னில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் : அத்தியாவசிய தேவைகளை தவிர தேவையின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை

மெல்போர்னில் தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதாகவும் இது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் அதிக கவனம் செலுத்தி கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புதிய தொற்று பரவல் மையங்கள் 8 உருவாகி இருப்பதாகவும் அதில் இருந்து தொடர்பு உடையவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Rising risk of delta virus infection in Melbourne. Experts warn people not to leave their homes unnecessarily except for essentials,.அத்தியாவசியத் தேவைகளுக்காக செல்லும் பணியாளர்கள் மூலமாக சமீபத்தில் தொடர்பில் அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கும் பட்சத்தில் வைரஸ் பாதிப்பை பூஜ்ஜியத்திற்கு கொண்டுவர முடியும் என்றும் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். சமூக பரவல் மூலமாக மேலும் 25 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் அதிலிருந்து மேலும் பரவாமல் தடுப்பதற்காக கவனம் செலுத்தி வருவதாக மெல்போர்ன் பிரீமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

முடக்க நிலையை மீறுபவர்கள் வைரஸ் பாதிப்பை அதிகரிப்பதற்கான காரணிகளாக இருக்கிறார்கள் என்றும் அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் James Trauer கூறியுள்ளார்.

Rising risk of delta virus infection in Melbourne. Experts warn people not to leave their homes unnecessarily except for essentials.தொற்று பரவல் மிக வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில் முடக்கநிலை அறிவிப்பதே ஒரே வழி என்றும், ஆனால் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை சந்திக்காமல் இருப்பதற்கு மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மின்சாரத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கவனத்தில் கொண்டு அதனை பின்பற்றி மெல்போர்னிலும் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், பூஜ்ஜியத்திற்கு கொண்டுவரும் பட்சத்தில் தான் நாம் முடக்க நிலையில் இருந்து விடுபட முடியும் என்றும் ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் கூறியுள்ளார்.

Link Source: shorturl.at/fnCS4