Breaking News

MH 17 ரக மலேசிய பயணிகள் விமானம் நடுவானில் தகர்க்கப்பட்ட விவகாரம் : சர்வதேச விமான போக்குவரத்து ஆணையரகத்தில் ரஷ்யா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டது ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து

MH17 Malaysian passenger plane crashes in mid-air. International Aviation Commission takes legal action against Russia Australia and Netherlands

கடந்த 2014ம் ஆண்டு நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான MH17 கடந்த 2014 ஜுலை மாதம் 17ம் தேதி கிழக்கு உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களில் 38 பேர் ஆஸ்திரேலியா சேர்ந்தவர்கள் ஆவர்.

MH17 Malaysian passenger plane crashes in mid-air. International Aviation Commission takes legal action against Russia Australia and Netherlands.இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நெதர்லாந்து பாதுகாப்பு ஆணையம் விமானத்தில் விபத்து ஏற்படுவதற்கான எந்த சாத்தியக் கூறுகளும் இல்லை என்றும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகவே விமானம் வெடித்து சிதறியது தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ரஷ்யா சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து ஆணையரகமான ICAO -ல் ரஷ்யா மீது சட்டபூர்வ விசாரணையை தொடங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகியவை கேட்டுக் கொண்டுள்ளனர் இதற்கான சட்டபூர்வ பணிகளையும் இரு நாடுகளும் தொடங்கியுள்ளன.

விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் பாலமாக சர்வதேச விமான போக்குவரத்து ஆணையரகம் செயல்பட்டு உரிய நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்திற்கு ரஷ்யா சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விமான விபத்து தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரி வருவதாகவும், இந்த விவகாரம் தற்போது வேகம் எடுத்துள்ள நிலையில் நெதர்லாந்து சட்டபூர்வமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் Marise Payne கூறியுள்ளார்.

MH17 Malaysian passenger plane crashes in mid-air. International Aviation Commission takes legal action against Russia Australia and Netherlands..மிக மோசமான இந்த தாக்குதல் தொடர்பாக உரிய நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும், அதுவே MH17 விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கான நியாயமான அஞ்சலியாக இருக்கும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகியவை கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது உக்ரைன் மீதான போர் காரணமாக இரு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து சர்வதேச விமான போக்குவரத்து ஆணையத்தின் சிறப்பு கட்டுப்பாடுகளுக்கு ரஷ்யா நிச்சயம் கட்டுப்பட வேண்டும் என்றும், அது சர்வதேச விசாரணை ஆணையத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றும் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணையில் நெதர்லாந்து சமர்ப்பித்த பெரும்பாலான ஆவணங்கள் ரஷ்யாவிற்கு எதிராக உள்ளதாகவும், ரஷ்யாவின் ராணுவ படை தளத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் மூலமாகவே தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது எனவே இந்த விவகாரத்தில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தற்போதைய போர்ச்சூழலில் அது மிகவும் அவசியமானது என்றும் இரு நாடுகளும் கேட்டுக்கொண்டுள்ளன.

Link Source: https://ab.co/3CLZHRq