Breaking News

Northern Territory -ல் விசாரணையின் போது பழங்குடியின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் : காவலர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்த திட்டம்

Indigenous youth shot dead during investigation in Northern Territory. Anti-Corruption Commission plans to probe policeman

கடந்த 2019ம் ஆண்டு Yuendumu -வில் பழங்குடியின இளைஞர் Kumanjayi Walker சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அங்கு சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கப்பட்டன. விசாரணைக்கு ஒத்துழைக்காமல் காவல்துறையினர் மீது கத்தரிக்கோலை குத்தி தாக்குதல் நடத்திய பின்னரே தற்காப்புக்காக பழங்குடியின இளைஞரை சுட்டதாகவும் இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் போலீஸ் கான்ஸ்டபிள் Zachary Rolfe மீது எந்தவித குற்ற முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் சட்டபூர்வமாக வழக்கு விசாரணையின் போக்கு குறித்து தொடர்புடைய பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

Indigenous youth shot dead during investigation in Northern Territory. Anti-Corruption Commission plans to probe policeman.கடந்த ஐந்து வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் விசாரணையில் குறிப்பிட்ட சில பிரிவுகள் போலீஸ் கான்ஸ்டபிள் Zachary Rolfe குற்றமற்றவர் என்று நிரூபணமாகி இருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார் அதே நேரத்தில் அவர் மீது ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் தங்கள் தரப்பு விசாரணை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து James Kirstenfeldt துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து முடிந்த பின்னர் உடலில் கட்டப்பட்டு இருந்த கேமராவில் மூலம் பதிவான காட்சிகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வீடியோ காட்சிகள் மற்றும் அதில் பதிவாகியுள்ள குரல்கள் குறித்தும் நீதிமன்றம் விரிவாக ஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நியாயமான சுதந்திரமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஊழல் தடுப்பு விசாரணை ஆணையத்தை Northern Territory-ன் எதிர்க்கட்சிகள் மற்றும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியான தலையீடுகள் அதிகம் இருப்பதாகவும் அதன் காரணமாக விசாரணையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முதலமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றம் மற்றும் விசாரணை ஆணையத்தால் விசாரிக்கப்படும் காவல் அதிகாரிகள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி அதனை சரிசெய்யும் வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தான் நியாயமான மற்றும் சுதந்திரமான முறையில் தன்னுடைய விசாரணையை தொடங்க இருப்பதாகவும் இதில் எந்தவிதமான இடையூறுகளும் இடம் இல்லை என்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையர் Michael Riches கூறியுள்ளார். போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அதன் சூழல் குறித்தும் பின்னணியில் விசாரணை நடத்தப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் குறித்தும் தான் அறிந்துகொள்ள இருப்பதாகவும் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பேற்று ஏற்று மாத காலங்கள் ஆகியுள்ள நிலையில் முந்தைய விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட சில ஆவணங்களை நீதிமன்றத்தில் இருந்து பெற வேண்டி இருப்பதாகவும், அதன் அடிப்படையில் போலீஸ் கான்ஸ்டபிள் Zachary Rolfe
இடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் ஆணையர் Michael Riches கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3wfl8Jl