Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் வடக்கு நதிக்கரை பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் : மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் கருத்து

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து இன்றி மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே தீவுகளாக சிக்கிக்கொண்டனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வடக்கு நதிக்கரை பகுதிகளான Mullumbimby, Lismore உள்ளிட்ட இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களில் மாநில அவசர கால சேவை அமைப்புடன் இணைந்து பல்வேறு தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Extreme levels of flood danger were announced in the northern part of New South Wales..அவர்கள் ஏராளமான மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை மீட்டு கொடுத்திருப்பதாகவும் அரசின் உதவியோடு மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தும் அளவுக்கு தன்னார்வலர்கள் மிகுந்த சிரமத்துடன் பணிகளை மேற் கொண்டதாகவும் பொது மக்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

குறிப்பிட்ட சில பகுதிகளில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதால் 200க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தது. முக்கிய சாலை மற்றும் பாலங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகவும், கூறப்பட்டுள்ளது மீட்புப் பணிகளில் 48 மணி நேரம் மிக சவாலானதாக இருந்ததாகவும் தன்னார்வலர்களின் பங்களிப்பு மீட்பு பணிகளில் முக்கியமானது என்றும் Byron Shire Council துணை மேயர் Sarah Ndiaye கூறியுள்ளார்.

மாகாணத்தின் அவசரகால மீட்பு குழுவோடு இணைந்து தன்னார்வலர்கள் மிகத்தீவிரமாக பணியாற்றிய தாகவும், குறிப்பிட்ட இடங்களில் அவர்களின் பங்களிப்பு காரணமாக மீட்புப் பணிகள் விரைந்து முடிப்பதற்கு உதவியாக இருந்ததாகவும் துணைமேயர் Sarah Ndiaye குறிப்பிட்டுள்ளார்.

Extreme levels of flood danger were announced in the northern part of New South WalesMullumbimby பகுதிகளிலிருந்து அவசரகால சேவை மையத்திற்கு வந்த 400க்கும் மேற்பட்ட அழைப்புகளை தன்னார்வலர்கள் மேற்கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும், பல்வேறு உயிர்களை அவர்கள் வெள்ள பாதிப்புகளில் இருந்து காப்பாற்றி இருப்பதாகவும் அவசரகால சேவை மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் ஏராளமான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மீட்புப் பணிகளின் போது பல்வேறு சோக நிகழ்வுகளை தாங்கள் பார்க்க நேர்ந்ததாகவும் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். உங்களது உடைமைகள் செல்லப்பிராணிகள் என பல்வேறு பொருட்களை மக்கள் மழை வெள்ளத்தில் இழந்து இருப்பதாகவும், வீடுகள் இன்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்காக காத்திருப்பதாகவும் மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் கூறியுள்ளனர்.

இந்நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் இருந்து அவசரகால சேவை மையத்திற்கு காவல்துறையினருக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த பகுதிகள் தனித்துவிடப்பட்ட தீவுகளை போல இருப்பதாகவும் தன்னார்வலர்கள் கூறியுள்ளனர் உடனடியாக அது போன்ற பகுதிகளை அடையாளம் கண்டு அங்குள்ள மக்களை மீட்பது தான் மிகவும் சவாலான வேலை என்றும் மீட்பு பணியில் உள்ள தன்னார்வலர்கள் குழு தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3KMtH2j