Breaking News

குயின்ஸ்லாந்தில் மழைக் காலத்தை முன்னிட்டு புதிய ரேடார் செயல்பாட்டுக்கு வந்துள்ளது..

New radar operation in Queensland ahead of rainy season

கடந்த 2019 இல் குயின்ஸ்லாந்தை தாக்கிய கனமழையின் காரணமாக அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக ஏராளமான கால்நடைகள் உயிரிழந்தன.

மேலும் 5 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

New radar operation in Queensland ahead of rainy season.இந்த நிலைக்கு காரணம் சரியான வானிலை குறித்த அறிவிப்பு இல்லாதது தான் என்று விவசாயிகளும் குயின்ஸ்லாந்து வாசிகள் தெரிவிக்கின்றனர் . சராசரியாக 60 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டல், ஒரே இரவில் 300 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகும் இதன் காரணமாக தன்னுடைய கால்நடைகளையும் உடமைகளையும் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது குயின்ஸ்லாந்துக்கென பிரத்தியேகமாக ஒரு ரேடார் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மழை குறித்த துல்லியமான விவரங்களை அறிந்து கொள்வது மூலமாக இழப்புகளை தவிர்க்க முடியும் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Link Source: https://ab.co/3dp2bJI