Breaking News

மெல்போர்னில் கார் விபத்து ..சம்பவ இடத்திலேயே பெண் பலி !

Melbourne Melville Road car accident Woman killed at the scene

மெல்போர்னின் வடக்கு பகுதியில் படுத்துக்கொண்டு இருந்த பெண் மீது கார் மோதியதில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
புதன்கிழமை இரவு 11 மணியளவில் Brunswick மேற்கு Melville தெருவில் படுத்து கொண்டிருந்த பெண் மீது கார் மோதியது. இதில் அப்பெண் படுகாயமடைந்துள்ளார். அவசர சேவைகள் அவரது உயிரை காப்பாற்ற போராடியது. எனினும் அவர் இறந்து விட்டார்.

Melbourne Melville Road car accident Woman killedகாரை ஓட்டிய டிரைவர் காரை அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டு, போலீசாரிடம் சரணடைந்தார். காயமடைந்த பெண் குறித்த விபரம் எதுவும் இதுவரை தெரியவில்லை. போலீசார் அந்த பெண்ணை விபத்து ஏற்படுவதற்கு முன் யாராவாது பார்த்தார்களா? அந்த பெண்ணிற்கு தெரிந்தவர்கள் யாரவது இருக்கின்றார்களா? யாரவது விபத்தை நேரில் பார்த்தார்களா ?என்று பல கோணத்தில் போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் பல உணவகங்கள், கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொது இடத்தில் நடந்த இந்த சாலை விபத்து அனைவரையும் பேர் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.