Breaking News

விளையாட்டு விபரீதமான பரிதாபம்..ஜெல்லி மீன்களால் சிறுவன் மரணம் !

Queensland Boy dies by jellyfish on Western Cape York beach

Cape York Peninsula நுனியில் நீந்திக் கொண்டிருக்கும் போது ஜெல்லி மீன்களால் குத்தப்பட்ட17 வயது சிறுவன் படுகாயமடைந்தான், Townsville மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.குயின்ஸ்லாந்து காவல்துறையினர் 17 வயதுடைய சிறுவன் மருத்துவமனையில் இறந்து விட்டார் என்பதற்கும், இம்மரணத்திற்கு ஒரு அறிக்கை வெளியிடப்படும் என்பதையும் உறுதிப்படுத்தினார்கள்.

jelly fishஆஸ்திரேலியா கடலில் Box ஜெல்லி மீன்களால் குத்தப்பட்டு 1880களில் இருந்து தற்போது வரை குறைந்தது 70 பேர் இறந்துள்ளனர். மேலும் பல வெளிநாடுகளிலும் உள்ளன. சிறுவனின் மரணம்,14 ஆண்டுகளில் முதன் முதலில் Chironex Fleckery இறப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

Dr Marlow Coates கூறுகையில், Wetsuit அல்லது Lycrasuit போன்ற பாதுகாப்பு உடைகள் இல்லையென்றால் நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கு வெளியே இருக்க வேண்டும் என அவர் கூறினார்.மேலும் உங்களிடம் பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இல்லை என்றால் தண்ணீரில் Stinkers அல்லது ஜெல்லி மீன்கள் இருப்பது உங்களுக்கு தெரிந்தால் உள்ளே செல்ல வேண்டாம் எனவும் கூறினார்.

ஆஸ்திரேலிய Box ஜெல்லிமீனான Chironex Fleckery, மிகவும் ஆபத்தான உயிரினமாகும், வெப்பமான மாதங்கள் முழுவதும் தண்ணீருக்குள் செல்வோருக்கு, வடக்கு குயின்ஸ்லாந்து கடற்கரையில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது ஒரு பெரிய மற்றும் வெளிப்படையான ஜெல்லிமீன் ஆகும். இது கனவடிவ அமைப்பில் இருப்பதால் Box ஜெல்லிமீன் என அழைக்கப்படுகிறது.

Queensland Boy dies by jellyfish on Western Cape Yorkஒரு ஜெல்லிமீனால் குத்தப்பட்ட எவரும் அதை பெரிய ஆபத்து என உணர்ந்து கடுமையான அச்சுறுத்தலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என Coates கூறினார். எந்த ஜெல்லிமீன் உங்களை குத்தி உள்ளது என்பதை புரிந்து கொள்வது கடினம் ஆகையால் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

ஜெல்லிமீன்களால் குத்தப்பட்டால் விரைவில் மருத்துவ உதவியை நாடுங்கள் மேலும் தொடர்ந்து வலி அல்லது மோசமான அறிகுறிகள் இருந்தால் ஆம்புலன்சை தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.