Breaking News

உலகில் அதிக நாட்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் மெல்போர்ன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Melbourne has topped the list of cities with the longest curfew in the world.

கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் மெல்போர்ன் நகரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 245 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் தளர்வுகளே இல்லாத நீண்ட ஊரடங்குக்கு உள்ளான நகராக மெல்போர்ன் மாறியுள்ளது. இதற்கு முன்பாக அர்ஜெண்டினா தலை நகர் பியூனஸ் ஆயர்ஸில் கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கி நவம்பர் வரை விதிக்கப்பட்டிருந்ததே அதிகபட்சமாக கருதப்பட்டது. மொத்தமாக பியூனஸ் அயர்ஸ்லில் 234 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தது.

ஆனால் பியூனஸ் அயர்ஸின் புற நகர் பகுதிகளில் தளர்வுகள் என்பது கொடுக்கப்பட்டிருந்தது.

Melbourne has topped the list of cities with the longest curfew in the world,மெல்போர்ன் மக்கள் தொகையில் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகே தளர்வுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த இலக்கை எட்ட அக்டோபர் 26 வரை ஆகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மெல்போர்ன் மக்கள் சுமார் 267 நாட்கள் வரை ஊரடங்கை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மெல்போரினில் இது வரை 6 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நீடித்த ஊரடங்கு என்பது அரசின் நிர்வாக தோல்வியை காட்டுவதாக எதிர்கட்சி தலைவர் Matthew Guy தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு பதிலளித்துள்ள ஸ்காட் மோரிசன், அரசை விமர்சிக்க மக்களுக்கு முழு சுதந்திரம் என்றாலும், மக்களை காக்க அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விமர்சிக்கும் எதிர்கட்சிகள் மாற்று வழிகளை பரிந்துரைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3oyMjef