Breaking News

காபூலில் மசூதியருகே நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பொதுமக்கள் 5 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மசூதி அருகே நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 10 பேர் காயமடைந்திருப்பதாகவும், 5 பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தாலிபான்களின் செய்தி தொடர்பாளர், ஜபிஹுல்லா ஈத்கா மசூதி அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழதிருப்பதாக தெரிவித்துள்ளார். காயமடைந்த 10 பேருக்கு தாலிபான்கள் இரத்த தானம் செய்திருப்பதாகவும், அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இறந்த ஜபிஹுல்லா முஜாஹிதினின் தாயாரது நினைவாக அந்த மசூதியில் ஞாயிற்றுக்கிழமை தொழுகை நடத்தப்பட்டது. அந்தத் தொழுகையில் கலந்துகொள்ள மற்ற தலிபான்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்புத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் உயிரிழந்த அனைவரும் பொதுமக்கள் எனவும் அவா்கள் மசூதிக்கு வெளியே நின்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் காபூல் நகரில் ஊா்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் சிறுவா்களும் பங்கேற்றனா்.

A bomb blast near a mosque in Kabul has killed at least five civiliansஇந்தச் சூழலில், தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் தாயாரது மறைவையொட்டி தொழுகை நடைபெற்ற மசூதியில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு அடிக்கடி நடைபெற்று வரும் குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று வருகிறது.

எனேவே, ஈத்கா மசூதியில் நடத்திய தாக்குலையும் அந்த அமைப்பினரே நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தாலிபான்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Link Source: https://bit.ly/3oFTqld