Breaking News

விக்டோரியா மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 1763 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.4 பேர் உயிரிழந்துள்ளனர்.

விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்ட தொற்று எண்னிக்கை ஆஸ்திரேலியாவில் இதுவரை பதிவாகிய அதிகபட்ச எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது .

விக்டோரியா மாகாணத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும் ஏராளமான பொதுமக்கள் இந்த கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவதில்லை என்று கருதப்படுகிறது.

A total of 1763 people were diagnosed with corona infection in the same day yesterday in the state of Victoria.4 people died,இதன் காரணமாக தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் தினசரி சுமார் 800 ஆக பதிவான தொற்று எண்ணிக்கை இன்று இரு மடங்கு உயர்ந்து சுமார் 1763 ஆக பதிவாகி உள்ளது. உயிரிழந்த 4 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் மூன்றாம் அலையில் இதுவரை 52 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் சுமார் 62,189 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 1763 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது ஒரு நாளில் கண்டறியப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது .

A total of 1763 people were diagnosed with corona infection in the same day yesterday in the state of Victoria.4 people died..இதற்கு முன்னதாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 1521 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதே அதிகபட்சமாக இருந்து வந்தது. தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மருத்துவ கட்டமைப்பு மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முன் களப்பணியாளர்கள் கடுமையாக நெருக்கடியை சந்திக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த விக்டோரியா மகான பிரிமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க கூடிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

80% பேருக்கு இரண்டு சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு தற்போது இருக்கக்கூடியது கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த இலக்கு அக்டோபர் 26ஆம் தேதி எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

A total of 1763 people were diagnosed with corona infection in the same day yesterday in the state of Victoria.4 people diedஇன்னும் ஒரு சில வாரங்கள் பொதுமக்கள் அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 6 நாட்களாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . இதே நிலை தொடர்ந்தால் அக்டோபர் 19-31 இடையே தினசரி சுமார் 2900 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் சுமார் 82% பேர் முதல் தவணைத் தடுப்பூசியும் 52% பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். விக்டோரியாவின் தற்போது 14 ஆயிரத்து 368 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். விக்டோரியா சிறைகளிலும் சுமார் 52 பேருக்கு கோவிட் தொற்று செய்யப்பட்டுள்ளது.

அதில் முப்பத்தி ஆறு பேர் சிறைக்கைதிகள் என்றும் 16 பேர் சிறை பணியாளர்கள் என்பது தெரியவந்துள்ளது அதேபோன்று விக்டோரியாவின் புறநகர் பகுதிகளில் தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

Link Source: https://ab.co/2ZQZ6hS