Breaking News

ஆஸ்திரேலியாவில் 70 சதவீதம் தடுப்பூசிகள் போடப்பட்ட பின்னர் ஊரடங்கில் பெருமளவு தளர்வுகள் கொண்டுவரப்படும் : பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதி

Massive relaxation of curfew after 70 per cent vaccination in Australia. PM Scott Morrison

Covid-19 பெற்று தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் இது தொடர்பாக பல்வேறு விவரங்களை பகிர்ந்து கொண்ட பிரதமர் மோரிசன், ஆஸ்திரேலியாவில் தகுதி வாய்ந்தவர்கள் 70 சதவீதம் பேருக்கு முழுவதுமாக தடுப்பூசி போடப்பட்ட பின்னர் மக்களுக்கான பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.

70 சதவீத தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்டுவதற்கான மாரத்தான் ஓட்டம் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அந்த இலக்கு விரைவில் எட்டப்படும் என்றும் பிரதமர் மோரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 70 சதவீதமும் அதே நேரத்தில் ஒவ்வொரு மாதமும் தாங்கள் நிர்ணயித்துள்ள இலக்கின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி குறிப்பிட்ட நாட்களுக்குள் முழு விவரங்களையும் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பல்வேறு மாகாணங்களில் தொட்டு பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை வழங்குவதற்கு நான்கு விதமான புதிய திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.

Massive relaxation of curfew after 70 per cent vaccination in Australia. PM Scott Morrison,Phase B தொகுப்பில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்ற பின்னர் முழுவதுமாக தகுதி வாய்ந்த 70 சதவீதம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு முடிந்திருக்கும் என்றும் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார். Phase C கிடைக்கும் பட்சத்தில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தி முடித்து விடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் தற்போது தகுதி வாய்ந்த 16 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 70% என்ற இலக்கை நாம் எட்டி விடலாம் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

பல்வேறு நாடுகளுக்குச் சென்று சிறப்பு விமானங்கள் மூலமாக ஆஸ்திரேலியா திரும்ப ஊருக்கு வருவோருக்கு Phase B திட்டத்திலேயே தடுப்பூசிகளை வழங்குவதற்கும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் இருக்கும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/2WAwrMp