Breaking News

ஆஸ்திரேலியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நீண்டகால பாதிப்பு அடைய வாய்ப்புள்ள உடையவர்களை ஆய்வுக்கு உட்படுத்த முடிவு : ஆரோக்கியமான வாழ்வுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோனைகள்

Decision to study long-term vulnerable people infected with the virus in Australia. Aloes provided for healthy living,.

ஆஸ்திரேலியாவில் இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக தொடர்ந்து வரும் நிலையில், ஏராளமானோருக்கு தொற்று பாதிப்பு நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை குணமாகாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

Decision to study long-term vulnerable people infected with the virus in Australia. Aloes provided for healthy living.மெல்போர்னை சேர்ந்த 42 வயதான அபி நாயர் Big 4 வங்கியில் பணியாற்றி வருகிறார். தினமும் 5 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி மேற்கொள்வதும், தனது மகளோடு விளையாடுவதும் என தன்னை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நபர். தோற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொண்டு சரியான பின்பு ஒரு வருட காலத்திற்கு பின்னர் தற்போது தொற்றுப் பாதிப்புகள் தொடர்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரஸ் மீதான நம்முடைய பார்வை பாதிப்புக்கு பின்னர் பெருமளவு மாறி விடுவதாகவும், அது மிகுந்த மன உளைச்சலையும் உடல் பாதிப்பையும் வந்துவிட்டதாக அபி நாயர் தெரிவித்துள்ளார். அபி நாயரின் மனைவி, தாய், தந்தை உள்ளிட்டவர்கள் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் 120 நாட்களுக்கு மேலாக அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் மேலும் ஒரு மாத காலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Decision to study long-term vulnerable people infected with the virus in Australia. Aloes provided for healthy living,தற்போது வரை அபி நாயரால் சீரான சுவாசம் மேற்கொள்ள முடியவில்லை என்றும், இதே போன்று தனது தந்தை பழைய ஆரோக்கியத்துடன் சரியான முறையில் நடக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். சிட்னியில் இதுதொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் நீண்டகால பாதிப்புக்கு ஆளான எண்ணிக்கை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Link Source: https://bit.ly/2VhF0v0