Breaking News

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன!

Many cultural communities in Australia have been claiming different information about the corona virus vaccine

ஆஸ்திரேலியாவில் உள்ள பல கலாச்சார சமூக தலைவர்கள் கூறுகையில், தவறான தகவல்களை பரப்புவதில் இருந்து, உயிர்களை காப்பாற்றும் திறன்கள் வரையிலும், மேலும் முக்கியமான Covid-19 தடுப்பூசி தகவல்களை மொழி ரீதியாகவும், பல வழிகளை மேற்கொண்டும் தெளிவாக தெரியப்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன என கூறினர்.

ஆஸ்திரேலியாவில் கலாச்சார மற்றும் மொழிகள் ரீதியான சமூகங்களுக்கு கொரோனா வைரஸ் பற்றி தெரிவிப்பது அதிகாரிகளுக்கு கடினமாகவே உள்ளது. மாநில சுகாதார செய்திகளில் பல மொழி பெயர்ப்பு பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் NSW-ல் உள்ள பல கலாச்சார சமூகங்களில் சிலர் Covid-19 சோதனைக்கு பணம் செலுத்த வேண்டும் என்று நினைத்து வருகின்றார்கள்.Covid-19 தடுப்பூசிகளை பற்றி கடந்த வாரம் 23.9 மில்லியன் டாலர் தகவல் அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டது.

சமூக சேவையாளரும் சிட்னியை சேர்ந்த ஆப்பிரிக்க இளைஞர்களின் தலைவருமான Murray-Jo-kamara கூறுகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள இளம் ஆப்பிரிக்கர்கள் மத்தியில் சமூக ஊடகங்கள் வழியாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் அவர்கள் நம்பும் நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து, தகவல் வருகின்றது என்றால் மக்கள் அதை எடுத்துக் கொள்ளலாம் என கூறினார்.

ஆஸ்திரேலியாவின் இந்து கவுன்சில் தலைவர் Prakash Mehta கூறுகையில், நாங்கள் ஒரு ப்ளையரை உருவாக்குவோம், மேலும் இது எங்கள் அனைத்து உறுப்பு அமைப்புகளிடம் பரப்பப்படும். மேலும் நாங்கள் இந்து சமூகத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் சில முக்கிய வெபினர்கள் செய்வோம் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் ஹிந்தி, தமிழ் மற்றும் பஞ்சாபியில் தகவல்களை வைத்திருப்பது ஆஸ்திரேலியாவின் இந்து சமூகத்திற்கு பெரிதும் பயனளிக்கும் எனவும் கூறினார்.

Mukesh Haikerwal விக்டோரியாவின் ஹாப்சன்ஸ் விரிகுடாவின் ஒரு பயிற்சியாளர் ஆவார். அவர் கூறியதாவது, ஆங்கிலம் அல்லாத மற்ற மொழி பேசும் சமூகங்களுக்கு சரியான தடுப்பூசி தகவல்களை பெறுவது உயிர்களை காப்பாற்றும் என்று கூறினார். மேலும் அவர் மொழி ரீதியாக வேறுபட்ட சமூகங்களுக்கு ஆஸ்திரேலியாவின் ஆங்கிலம் பேசும் மக்களுக்கு வழங்கப்படும் அதே அளவிலான தடுப்பூசி தேவைப்படுகிறது எனவும் கூறினார்.

ஆஸ்திரேலிய மக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், மற்றும் பெரும்பாலான விசா வைத்திருப்பவர்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது. அதாவது மாணவர், வேலை செய்ய வருபவர், திறமையான நபர், குடும்பம், பங்குதாரர், அகதி, மனிதாபிமான மற்றும் சிறப்பு விசாவில் வந்த அனைவரும் இந்த இலவச தடுப்பூசிக்கு தகுதியானவர்கள்.

ஆனால் சுற்றுலா, போக்குவரத்து, eVisitor மற்றும் மின்னணு பயண அதிகாரம் போன்றவைகளில் வந்தவர்களுக்கு இலவச தடுப்பூசி பெற தகுதி பெறமாட்டார்கள். மேலும் இந்த நான்கு விசாக்களில் வந்தவர்கள் சுமார் 69,000 ஆஸ்திரேலியாவில் உள்ளனர் என உள்துறை தெரிவித்துள்ளது.