Breaking News

தீப்பிழம்பின் கடுமையான வெப்பத்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது !

homes lost and It is feared that the intense heat of bushfire flames may cause casualties

Perth’s northeastern பகுதியில் பரவிய காட்டுத்தீயால் 71க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளை அச்சுறுத்தும் விதமாக 80 கி.மீ. சுற்றளவு கொண்ட massive blaze பகுதியில் இரவு முழுவதும் பரவியது. சூடான காற்று மணிக்கு 75 கி.மீ / மணி வரை வீச கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DFES Commissioner Darren Klemm கூறுகையில், தீ விபத்தில் 71 வீடுகள் எரிந்து நாசமாகி விட்டன. இது மேலும் உயரக்கூடும் என்றார். தீப்பிழம்பானது வேகமாக நகரகூடியதாகவும், 3.5 கி.மீ. முன்னால் இருக்கிறது. தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை என்றார்.

மாநிலத் முதல்வர் Mark McGowan கூறுகையில், Gidgegannup அருகில் உள்ள கிராமப்புறத்தில் உள்ள அனைத்து சொத்துக்களில் 80% இழந்து விட்டதாகவும், தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீயணைப்பு வீரர்களுக்கு உதவும் நோக்கில் NSW விலிருந்து வான்வழியே Tank வர இருப்பதாகவும், தீ விபத்து குறித்து பிரதமருக்கு விளக்கம் அளித்ததாகவும் கூறினார்.

தீ விபத்தில் 35 கி.மீ. தொலைவில் உள்ள Perth’s CBD மற்றும் கடலோர புறநகர் பகுதியில் உள்ள மக்களின் வீடுகளில் சாம்பல் விழுகின்றன. Wooroloo விலிருந்து 25 கி.மீ வரை உள்ள Walyunga National Park வரை உள்ள மக்கள் வெளியேற தாமதம் ஏற்படுகிறது. மேலும் தீ வருவதற்கு முன்பு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். தீப்பிழம்பின் கடுமையான வெப்பத்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்று DFES எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீ விபத்து குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், வீட்டின் முற்றம் சாம்பலால் மூடப்பட்டிருந்தது. நாங்கள் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் வெளியேறினோம். Parkerville, Ellenbrook, Chidlow மற்றும் Jane Brook பகுதியை சுற்றியுள்ள தீயை எதிர்த்து போராட நாங்கள் தயாராக இல்லாததால் வெளியேறி விட்டோம் என்று கூறியுள்ளனர் .

Ellenbrook-ல் உள்ள மக்கள் கூறுகையில், நாங்கள் அதிகாலை 3 மணியளவில் வெளியேறி Brown Park சென்று விட்டோம். பூங்காவில் 300 பேர் தஞ்சமடைந்துள்ளோம். இங்கு உள்ள அனைவரும் முகக்கவசம் அணிந்து தொலைதூரத்தில் உள்ளோம். இப்பொழுதும் கவலையாக இருக்கிறோம். இங்கேயும் புகைவர தொடங்கியுள்ளது. சூரியனை பார்க்க முடியாத அளவிற்கு புகைமூட்டம் காணப்படுகிறது என்றனர். மக்கள் வெளியே வரும்போது கட்டாயமாக மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று DFES கூறியுள்ளது.