Breaking News

ஆஸ்திரேலியாவின் பெர்த் மாகாணத்தில் உடற்கூறாய்வில் கண்டறியப்பட்ட Legionella பாக்டீரியா : மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Legionella bacteria detected in autopsy in Perth, Australia. Precautionary measures to prevent the spread to other hospitalized patients.

பெர்த் மாகாணத்தில் உள்ள Sir Charles Gairdner  மருத்துவமனையில் உயிரிழந்த ஒருவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யும்போது அவரது உடலில் பாக்டீரியாக்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விரிவான அறிக்கை கோரப்பட்டு இருப்பதாகவும், நேரடியாக அவரது உடலில் இந்த Legionella பாக்டீரியாக்கள் வந்து அதன் காரணமாக அவர் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேநேரம் இது தொடர்பான விரிவான ஆய்வறிக்கை கிடைத்த பிறகே Legionella பாக்டீரியா தாக்குதல் குறித்த விவரங்கள் கிடைக்கப் பெறும் என்று வடக்கு மெட்ரோபாலிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், குறிப்பிட்ட அறைகளில் வெந்நீர் செலுத்தும் பகுதிகளில் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் அங்கு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மேலும் மருத்துவமனையில் 14 அறைகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டு அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்ட பிறகே திறக்கப்பட்டன.

Legionella bacteria detected in autopsy in Perth, Australia. Precautionary measures to prevent the spread to other hospitalized patientsஇதிலும் அறையிலிருந்த இரண்டு நோயாளிகளுக்கு பாக்டீரியா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக prophylactic ஆன்டிபயாடிக் மருந்து வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. Sir Charles Gairdner மருத்துவமனையின் குடிநீர் வழங்கும் குழாயில் இதுபோன்ற பாக்டீரியாக்கள் கண்டறிய பெற்றிருப்பது சாதாரணமான ஒன்று அல்ல என்றும், இதுதொடர்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கடந்த வாரமே குரல் எழுப்பியதாக தெரிவித்த குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர்
Roger Cook மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நேரத்தில் இது தொடர்பான விரிவான விளக்கத்தை மருத்துவமனை தரப்பில் இருந்து தனக்கு அளிக்காதது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் சுகாதார அமைச்சர் Roger Cook கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கான உரிய விளக்கத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அளிக்கவில்லை என்றும், இந்த விவரம் தெரிந்து இருந்தும் அவர் மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட Legionella பாக்டீரியா மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கிடைத்த பிறகு முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் முக்கிய இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Link Source: https://ab.co/3GcC7Ok